For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காஞ்சி அருகே சம்பவம்: செல்ஃபி எடுத்தபோது ஆற்று நீரில் அடித்து செல்லப்பட்ட 3 வாலிபர்கள் மீட்பு

By Veera Kumar
Google Oneindia Tamil News

சென்னை: காஞ்சிபுரம் மாவட்டம் பழைய சீவரம் பாலாற்று மேம்பாலம் அருகில் நின்று வெள்ளத்துடன் சேர்த்து தங்களை செல்ஃபி எடுத்த மூவர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட நிலையில், தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினர் 4 மணி நேரம் போராடி அவர்களை பத்திரமாக மீட்டனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத்தை அடுத்த பழையசீவரம் பாலாற்று பாலத்தில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுகின்றது. இளைஞர்கள் சிலர் அதை பார்க்க ஆர்வம் காட்டி வருகிறார்கள். இதற்காக அதோடு, அதன் அருகே நின்று, செல்போனில் செல்ஃபி போட்டோக்களையும் எடுத்துதள்ளுகின்றனர்.

3 youth who were try to took selfie with river washed away

படம்: நன்றி news7

இந்நிலையில் வாலாஜாபாத்தை அடுத்த புளியம்பாக்கத்தை சேர்ந்த அலெக்ஸ், விஜி மற்றும் பாரதி ஆகிய மூன்று மாணவர்கள் அப்பகுதியில் நின்று தங்கள் செல்போனில் செல்ஃபி எடுத்துக்கொண்டிருந்தனர். ஆர்வத்தில் ஆற்றின் அருகேயே சென்றுள்ளனர். திடீரென மண் சரிந்ததால் மூவரும் வெள்ளநீரில் விழுந்து அடித்து செல்லப்பட்டனர்.

தகவல் அறிந்து அங்கு வந்த மீட்பு குழுவினர் 4 மணி நேரம் போராடி மூன்று மாணவர்களையும் மீட்டனர். இதுகுறித்து மீட்பு படையினர் கூறுகையில், எதிர்பாராமல் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கவே எங்களுக்கு நேரம் போதவில்லை. இப்படி, ஆர்வம்மிகுதியால் வந்து வெள்ளத்தில் அடித்துச் செல்பவர்களையும் நாங்கள்தான் காப்பாற்ற வேண்டியுள்ளது. இதனால் எங்களது சக்தியும், நேரமும் விரையமாகிது என்றனர்.

அப்பகுதி மக்கள் சிலரோ, இப்படிப்பட்டவர்களை ஏன் காப்பாற்றினீர்கள். அப்படியே வெள்ளத்தில் போகட்டும் என்று மீட்பு படையினரிடம் சண்டைபோடாத குறையாக சத்தம் போட்டுள்ளனர்.

English summary
3 youth who were try to took selfie with river washed away by flood near Chennai.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X