For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ரூ.1 கோடி சம்பளத்தில் கார்ப்பரேட் வேலை: கான்பூர் ஐஐடி மாணவர்கள் நிராகரிப்பு

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: மாதத்திற்கு ஒரு லட்சம் சம்பளத்தில் புது வேலை கிடைத்தாலே பார்க்கிற வேலையை விட்டுவிட்டு அந்த வேலைக்கு தாவுபவர்கள்தான் இன்றைக்கு பல நிறுவனங்களில் உள்ளனர்.

4 IIT-Kanpur students turn down Rs 1 crore per annum offers

ஆனால் கான்பூர் ஐஐடியில் படிக்கும் நான்கு மாணவர்கள், வளாகத்தேர்வில் தங்களுக்கு ஆண்டுக்கு ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமாக ஊதியம் கிடைக்க வாய்ப்பிருந்தும் அந்த வேலைவாய்ப்புகளைப் நிராகரித்துள்ளனர்.

அதேசமயம் ஒரு கோடி ரூபாய் சம்பளத்தை மறுத்துவிட்டு ஆண்டுக்கு ரூபாய் 50 லட்சம் சம்பளம் தரும் வேலையை பெற்றுள்ளனர் இரண்டு மாணவர்கள்.

ஒரு சிலரோ, உயர்கல்வி மற்றும் வேலையில் நிறைவின்மை மற்றும் ஆகியவற்றுக்காக தங்களுக்கு ரூ. 1 கோடி ஊதியம் கிடைக்கும் வாய்ப்பை மறுத்துள்ளனர்.

இதுதொடர்பாக கான்பூர் ஐஐடி வேலைவாய்ப்பு மைய தலைவர் பேராசிரியர் தீபு பிலிப் கூறியதாவது:

வியாழக்கிழமையன்று நடந்த வளாகத் தேர்வில் ஒரு மாணவி, மூன்று மாணவர்களுக்கு ஆண்டுக்கு ஒரு கோடி ரூபாய்க்கும் கூடுதலான ஊதியம் வழங்க பன்னாட்டு நிறுவனம் ஒன்று முன்வந்தது.

அம்மாணவர்களின் நிகர ஊதியம் மட்டும் ஆண்டுக்கு ரூ. 93 லட்சமாகக் கிடைக்கும். ஆனால், நான்கு மாணவர்களும் அந்த வாய்ப்பை ஏற்க மறுத்து விட்டனர்.

அதில், ஒரு மாணவனும் ஒரு மாணவியும் தங்களுக்கு அந்த வேலை தொழில்ரீதியான மனநிறைவைத் தராது எனக் கூறி மறுத்து விட்டனர்.

ஆண்டுக்கு ரூ. 50 லட்சம் ஊதியமளிக்கும் வேறொரு சிறு நிறுவனத்தில் அவர்கள் பணி நியமன ஆணை பெற்றுக் கொண்டனர். மற்ற இரண்டு மாணவர்கள், உயர்கல்வியைத் தொடர விரும்புவதால் ரூ. 1 கோடி ஊதிய வாய்ப்பை நிராகரித்து விட்டதாக அவர் கூறியுள்ளார்.

வேலையை மறுத்த நான்கு மாணவர்களின் பெயர்கள் மற்றும் ரூ. 1 கோடி ஊதியம் அளிக்க முன்வந்த நிறுவனத்தின் பெயரை வெளியிட கான்பூர் ஐஐடி நிர்வாகம் மறுத்து விட்டது.

கடந்த சில நாட்களுக்கு முன் காரக்பூர் ஐஐடி மாணவர் ஒருவருக்கு ஆண்டுக்கு ரூ.1.54 கோடி ஊதியம் அளிக்க ஒரு பன்னாட்டு நிறுவனம் முன்வந்தது குறிப்பிடத்தக்கது.

English summary
Considerations of professional fulfilment and a desire to pursue higher studies have trumped offers of eight-figure salaries during placements at IIT Kanpur as four students chose to turn down jobs which would have paid them more than Rs 1 crore yearly.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X