நடப்பு கல்வியாண்டில் புதியதாக 4084 ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர்... சட்டசபையில் செங்ஸ்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடப்பு கல்வியாண்டில் புதியதாக 4084 ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். மேலும் மதுரையில் ஒரு லட்சம் நூல்களுடன் மாபெரும் நூலகம் அமைக்கப்படும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டசபைக் கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறையில் 37 அறிவிப்புகளை அமைச்சர் செங்கோட்டையன் இன்று அறிவித்தார்.

அதன்படி சென்னை பெரியார் அறிவியல் தொழில்நுட்ப மையத்தில் அறிவியல் கோளம் ரூ.2.50 கோடியில் அமைக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். மூன்று கோடி ரூபாய் செலவில் 32 மாவட்டங்களில் புத்தக கண்காட்சி நடத்தப்படும் என்றும் சட்டசபையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

புதியதாக 4084 ஆசிரியர்கள்

புதியதாக 4084 ஆசிரியர்கள்

மாதம் ரூ.7,500 ஊதியத்தில் பகுதி நேர ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றும் தமிழக அரசு அறவிவித்துள்ளது. மேலும்
நடப்பு கல்வியாண்டில் புதியதாக 4084 ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மதுரையில் மாபெரும் நூலகம்

மதுரையில் மாபெரும் நூலகம்

மதுரையில் ஒரு லட்சம் நூல்களுடன் மாபெரும் நூலகம் அமைக்கப்படும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்தார்.
அரியவகை நூல்கள், ஆவணங்களுடன் நூலகம் அமைக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

ரூ.30கோடி செலவில் புத்தகங்கள்..

ரூ.30கோடி செலவில் புத்தகங்கள்..

மேலும் மெட்ரிக் பள்ளிகள் தொடங்க இணையதளம் மூலம் விண்ணப்பிக்க அனுமதி அளிக்கப்படும் என்றும் அவர் கூறினார். 30 கோடி ரூபாய் செலவில் பொது நூலகங்களுக்கு புதிய நூல்கள் வாங்கப்படும் என்றும் அவர் கூறினார்.

10,000 கழிப்பிடங்கள்

10,000 கழிப்பிடங்கள்

அழகப்பா பல்கலைக்கழகத்தில் ரூ.2.10 கோடியில் திறன் வங்கி மையம் தொடங்கப்படும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். பள்ளிகளில் இந்த ஆண்டு 10,000 கழிப்பிட வசதிகள் ஏற்படுத்தப்படும் என்றும் செங்கோட்டையன் கூறினார்.

17,000 நிரந்தர பணியிடங்கள்

17,000 நிரந்தர பணியிடங்கள்

பொதுத்தேர்வுகளை சந்திக்கும் மாணவர்களுக்கு ஒன்றிய அளவில் சிறப்பு பயிற்சி அளிக்கப்படும் என்றும் அண்ணா நூற்றாண்டு நூலகத்திற்கு தொழில்நுட்ப நூல்கள் வாங்க ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 17,000 தற்காலிக ஆசிரியர் பணியிடங்கள் நிரந்தர பணியிடங்களாக மாற்றப்படும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்தார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
School Education Minister Sengottaiyan said that 4084 teachers will be appointed in the current academic year. A great library will be set up with a million books in Madurai, Minister Sengottiyan said.
Please Wait while comments are loading...