கோவில்பட்டி அருகே சாலை விபத்தில் 3 பெண்கள் உட்பட 5 பேர் பரிதாப பலி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் இரண்டு இடங்களில் நிகழ்ந்த சாலை விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். கோவில்பட்டியில் நிகழ்ந்த விபத்தில் 5 பேர் பலியான நிலையில் லாரி டிரைவர் கவலைக்கிடமாக உள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகே சாலையில் நின்று கொண்டிருந்த கார் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த தண்ணீரில் மூழ்கி பலியாகினர்.

10 killed in car crash in Two accident in TN

சென்னையில் இருந்து புதுக்கோட்டை நோக்கி சென்ற கார் ஒன்று மதுராந்தகத்தை அடுத்த தொழுபேடு அருகே சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நின்று கொண்டிருந்தது.
அப்போது சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு சென்ற அரசு பேருந்து கார் மீது பின்புறமாக மோதியது.

10 killed in car crash in Two accident in TN

மோதிய வேகத்தில் அருகிர் இருந்த ஏரியில் கார் தலைகீழாக கவிழ்ந்து நீரில் மூழ்கியது. இந்த விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த தமிழ்ச்செல்வி, தினேஷ், பிரபாவதி, ராதிகா, இளம்பரிதி ஆகிய 5 பேர் உயிரிழந்தனர். காயங்களுடன் 2 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கோவில்பட்டி நாலாட்டின் புதூர் அருகே லாரியும் காரும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் இரண்டு ஆண்கள் மூன்று பெண்கள் உட்பட ஜந்து பேர் பலியாகினர் . லாரி டிரைவர் கிளினர் கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
10 people were killed when two road accident car and bus collided near Chennai and Kovilpatti.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற