குடியை விடு.. படிக்க விடு.. மதுவுக்கு எதிராக தனி ஒருவனாக போராடிய 7 வயது சிறுவன் !

Posted By:
Subscribe to Oneindia Tamil

காஞ்சிபுரம்: மதுவுக்கு எதிராக 7 வயது சிறுவன் ஆகாஷ் நடத்திய போராட்டம் காஞ்சிபுரம், கேளம்பாக்கம் பகுதியில் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

குடி குடியை கெடுக்கும் குடிப்பழக்கம் உடல் நலத்தை கெடுக்கும் என்ற வாசகம் மதுப்பிரியர்களுக்கும் தெரியும். இருப்பினும் மது அருந்துபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது பெரும் வேதனைக்குரியது. இதனால் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு மதுவால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

 7 years old child protest against tasmac shop

இதனிடையே தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகள் உடனடியாக மூடவேண்டும் என சுப்ரீ்ம் கோர்ட் சமீபத்தில் உத்தரவிட்டது. இதனையடுத்து மூடப்பட்ட கடைகளுக்கு பதிலாக மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் மாநில அரசு புதிய மதுக்கடைகளை திறந்து வருகிறது.

இதையடுத்து மதுக்கடைகள் அமைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆங்காங்கே மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பொது மக்களின் தொடர் போராட்டாத்தால் புதிய மதுக்கடைகளை திறக்க முடியாமல் மாநில அரசு திணறி வருகிறது. இதனால் அரசுக்கு பெருமளவு வருவாய் இழப்பும் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டம் கேளம்பாக்கத்தை அடுத்த படூரில் உள்ள மதுக்கடையை மூடக்கோரி, கடந்த சில நாட்களுக்கு முன்னர் பொதுமக்கள் போராட்டம் நடத்தி, கடையையும் சூறையாடினர். அந்தக் கடையை மீண்டும் திறக்கக் கூடாது என வலியுறுத்தி, அதே ஊரைச் சேர்ந்த ஆகாஷ் என்ற 7 வயது பள்ளிச்சிறுவன் 'குடியை விடு, படிக்க விடு' என்ற பதாகையைக் கையில் ஏந்தியபடி சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் இருந்த அரசு டாஸ்மாக் கடை முன்பு அமர்ந்து போராட்டம் நடத்துவதற்காக நடந்தே சென்றான்.

பள்ளிச் சீருடை அணிந்து, மதுவுக்கு எதிராக எழுதப்பட்ட பதாகையுடன் சென்ற அந்தச் சிறுவனை, சாலையில் சென்ற அனைவரும் வியப்புடன் பார்த்தபடி கடந்து சென்றனர். மதுக்கடை அருகே சென்ற சிறுவனிடம் அங்கு வந்த போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் டாஸ்மாக் கடை மூயிடிருப்பதைக் காட்டி சிறுவனை போலீசார் சமாதானம் செய்தனர். இதை அடுத்து சிறுவன் ஆகாஷ் திரும்பிச் சென்றான்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
7 years old child protest against tasmac shop near kanchipuram
Please Wait while comments are loading...