ருக்மணி பாட்டியை தொடர்ந்து மீண்டும் ஒரு அதிர்ச்சி.. குழந்தை கடத்த வந்ததாக கூறி மூதாட்டி அடித்து கொலை
குழந்தை கடத்த வந்ததாக நினைத்து விருத்தாசலம் அருகே மூதாட்டி ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை: குழந்தை கடத்த வந்ததாக நினைத்து விருத்தாசலம் அருகே மூதாட்டி ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விருத்தாசலத்தில் பெண்ணாடம் அருகே உள்ளது வால்பட்டறை. இங்கு 60 வயது லட்சுமி அம்மாள் என்ற மூதாட்டி வந்தார்.
அவரை குழந்தை கடத்த வந்ததாக நினைத்த கிராம மக்கள் சரமாரியாக தாக்கினர். இதில் படுகாயமடைந்த மூதாட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மூதாட்டி கொலை
இந்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மூதாட்டி சிகிச்சைப்பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பறிபோகும் உயிர்கள்
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் மூதாட்டியை தாக்கியவர்களை தேடி வருகின்றனர். குழந்தை கடத்தல் வதந்தியால் திருவண்ணாமலை, திருவள்ளூர், வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இதுவரை ஏராளமான உயிர்கள் பறிபோயுள்ளன.

கொல்லப்பட்ட ருக்மணி
அண்மையில் சென்னை குரோம்பேட்டையை சேர்ந்த ருக்மணி என்ற மூதாட்டி திருவண்ணாமலை அருகே குலதெய்வ கோவிலுக்கு சென்றபோது கிராம மக்களால் அடித்து கொல்லப்பட்டார்.

தலைதூக்கும் படுகொலை
குழந்தைகளுக்கு அவர் சாக்லேட் கொடுத்ததால் சந்தேகமடைந்த கிராம மக்கள் அவரை அடித்தே கொன்றனர். இதுபோன்ற படுகொலைகள் காவல்துறையினரின் எச்சரிக்கையால் சற்று ஓய்ந்திருந்த நிலையில் தற்போது மீண்டும் இந்த படுகொலைகள் தலைதூக்க தொடங்கியுள்ளன.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications