கணவரின் நண்பருடன் கள்ளக்காதல்.. கண்டித்த கணவன்.. கள்ளக்காதலுடன் பெண் எடுத்த விபரீத முடிவு!
ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில் கள்ளக்காதல் விவகாரம் வீட்டுக்கு தெரியவந்ததால் கள்ளக்காதல் ஜோடி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் திமிரி அடுத்த வெள்ளகுளம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மனைவி சரிதா(34). இவர்களுக்கு சரண்யா(19) என்ற திருமணமான மகளும், பாலா என்ற மகனும் உள்ளனர்.
ராஜேந்திரன் கட்டிட மேஸ்திரியாக பணிபுரிந்து வருகிறார். ராஜேந்திரனின் நண்பர் வெங்கடாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாரதி(36). இவருக்கு திருமணமாகி இரு மகள்கள் உள்ளனர்.

கணவரின் நண்பர்
ராஜேந்திரனின் மனைவியான சரிதா அவ்வப்போது தனது கணவருடன் கட்டிட வேலைக்கு சென்று வருவதாக கூறப்படுகிறது. அப்போது கணவரின் நண்பரான பாரதி என்பவருடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது. நாளைடைவில் இந்த பழக்கம் கள்ளக்காதலாக உருவெடுத்ததுள்ளது.

கள்ளக்காதல்
சரிதாவும், பாரதியும் தங்களுக்கு குழந்தைகள், குடும்பம் இருக்கிறது என்ற எந்தவித கவலையும் இன்றி முறையற்ற உறவை தொடர்ந்து வந்துள்ளனர். இருவரின் முறையற்ற உறவு ராஜேந்திரனுக்கு தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவர் தனது மனைவி சரிதவிடம் 'உனக்கு குடும்பம், குழந்தைகள், உறவுகள் இருக்கிறது. இப்படிப்பட்ட அசிங்கமான உறவை கைவிட்டு விடு'' என்று கண்டித்துள்ளார்.

தற்கொலை
ராஜேந்திரன் கண்டித்ததால் சரிதா மனவேதனை அடைந்தார், இதனை தொடர்ந்து அவர் கணவரின் நண்பரும், கள்ளக்காதலனுமான பாரதியை வெள்ளக்குளம் கிராமத்தில் உள்ள காட்டுப்பகுதியில் சந்தித்துள்ளார். அப்போது இருவரும் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்தனர். இதனை தொடர்ந்து கள்ளக்காதல் ஜோடிகள் இருவரும், சரிதா அணிந்திருந்த புடவையைக் கொண்டு வேப்பமரத்தில் ஜோடியாக தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

போலீசார் தீவிர விசாரணை
இதனைக் கண்ட அக்கம்பக்கத்தினர் திமிரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இருவரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கள்ளக்காதல் என்னும் கொடிய மிருகம் கடைசியில் இருவரின் உயிரை பறிக்க காரணமாக அமைந்தது வெள்ளகுளம் கிராம மக்களிடம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications