For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜெ. மரணம் குறித்து விசாரிக்க கோரிய டிராபிக் ராமசாமி வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க கோரி டிராபிக் ராமசாஅமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை : ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை கோரி கோரி சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். அந்த வழக்கு ஜனவரி 9ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

முதல்வர் ஜெயலலிதா கடந்த 5அம் தேதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். அவரது உடல் அடுத்த நாளான செவ்வாய்க்கிழமை மெரினா கடற்கரையில் உள்ள எம்ஜிஆர் சமாதி வளாகத்தில் நல் அடக்கம் செய்யப்பட்டது.

A petition against memorial for CM Jayalalitha : The trial is postponed to January...

இந்நிலையில் ஜெயலலிதா மரணம் குறித்து கோரி சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் பிரதாப் ரெட்டி, சசிகலா, சிஆர்.சரஸ்வதி, பொன்னையன் ஆகியோரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உடலை பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் பிரதாப் ரெட்டி, சகிகலா, கீதா ரெட்டி ஆகியோரின் பாஸ்போர்ட்டை முடக்க வேண்டும் என்றும் கோரியிருந்தார். அப்பல்லோ மருத்துவமனையில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை தாக்கல் செய்ய வேண்டும் என்றும், மரணம் தொடர்பாக விசாரிக்க சிபிஐ, டிஆர்ஐ, மற்றும ஐபி ஆகிய துறை அதிகாரிகள் அடங்கிய சிறப்பு விசாரணை குழுவை அமைக்க வேண்டும் என்றும் டிராபிக் ராமசாமி மனுவில் கோரியிருந்தார்.

இந்த மனு இன்று தலைமை நீதிபதி எஸ்.கே.கவுலிடம் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி விசாரணையை வரும் ஜனவரி 9ஆங்ம தேதிக்கு ஒத்தி வைத்தார். முன்னதாக டிராபிக் ராமசாமி உடல்நலக் குறைவு காரணமாக ஆஜராகவில்லை. அவரது மாணவி பாத்திமா மட்டும் ஆஜராகியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Traffic Ramaswamy filed a petition In Madras High Court against to set up a monument where Chief Minister Jayalalitha's body were buried. The trial has been postponed to January 9th.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X