For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பெரும் சிக்கலில் ஜி டிவி

Google Oneindia Tamil News

சென்னை: தமிழ் செய்தி தொலைக்காட்சியான ஜி டிவி ஊழியர்களின் சம்பளப் பிரச்சனையால் இழுத்து மூடப்பட்டது.

சென்னையைச் சேர்ந்த மடிப்பாக்கம் வேலாயுதம் என்பவர் ஒரு தொழில் அதிபர். இவருக்கு சொந்தமான தொலைக்காட்சி தான் ஜி டிவி. இந்த நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு சம்பளப் பிரச்சனை இருந்து வந்தது. மாதந்தோறும் சம்பளம் வந்ததே கிடையாது. ஜி டிவி நிறுவனம் ஊழியர்களுக்கு கொடுக்க வேண்டிய நிலுவைத் தொகை கிட்டத்தட்ட ரூ.1 கோடிக்கு மேல் என கூறப்படுகின்றது.

இரண்டு மாதம் அல்லது மூன்று மாதத்துக்கு ஒரு முறை தான் சம்பளம் வரும். இந்த நிலையில் திடீரென ஜி டிவியின் ஒளிபரப்பு நிறுத்தப்பட்டது.
இதையடுத்து அங்கே பணியாற்றிய ஊழியர்கள் மூன்று மாதம் சம்பளம் வேண்டுமென்று கோரிக்கை விடுத்தார்கள். இந்தப் பிரச்சினை காவல்துறை வரை சென்றது.

காவல்துறை விசாரணையை கையில் எடுத்த போது ஒரு அரசியல் கட்சி தலைவரும், ஒரு காவல்துறை அதிகாரியும் இதில் தலையிட்டு, வேலாயுதத்தை காப்பாற்ற முயன்றதாக கூறப்படுகின்றது.

அனைத்து பத்திரிக்கையாளர்களும் ஒருங்கிணைந்து ஜி டிவி ஊழியர்களுக்கு ஆதரவாக செயல்பட்டதன் பலனாக நீண்டநாள் சம்பள பிரச்னை ஓரளவு முடிவுக்கு வந்தது. முதல்கட்டமாக 60 லட்ச ரூபாய் செட்டில் செய்யப்பட்டுள்ளது.

விரைவில் நாடாளுமன்ற தேர்தல் வரும் நிலையில் ஜி டிவி மீண்டும் தனது ஒளிபரப்பை துவங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

English summary
A private news channel in TN has stopped functioning after it failed to give salary to its employees.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X