ஜோலார்பேட்டையில் காத்திருக்கும் சர்ப்ரைஸ்.. திருப்பத்தூர் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் தரும் மெசேஜ்?

Subscribe to Oneindia Tamil

வேலூர்: தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ஆளுங்கட்சியான திமுக, தனது தேர்தல் வெற்றியை உறுதி செய்வதற்கான வியூகங்களை மிகவும் நுணுக்கமாக வகுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, திருப்பத்தூர் மாவட்டத்தில், திமுகவின் மிகப்பிரம்மாண்டமாக நடைபெறுகிறது. இதில் பங்கேற்க முதலமைச்சர் ஸ்டாலின் ரயில் மூலம் திருப்பத்தூர் வந்துள்ளார்..

ஜோலார்பேட்டையை அடுத்த மண்டலவாடி பகுதியில் திமுக வடக்கு மண்டல வாக்குச்சாவடி குழு பயிற்சி மாநாடு இன்று நடைபெற உள்ளது.. இந்த மாநாட்டிற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட மண்டலவாடி பகுதியில் சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்டமான பந்தல் மற்றும் மேடை அமைக்கப்பட்டுள்ளது.

Jolarpettai DMK Tirupattur


ஜோலார்பேட்டை - திருப்பத்தூர்

கடந்த சில நாட்களாகவே பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் இந்த ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வந்தன. தொண்டர்கள் மற்றும் முகவர்கள் அமருவதற்கான வசதிகள், குடிநீர் மற்றும் உணவுப் பரிமாறும் இடங்கள் என அனைத்தும் நவீன வசதிகளுடன் திட்டமிடப்பட்டுள்ளன.

சுமார் 1.75 லட்சம் பேர் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால், திருப்பத்தூர் முதல் வாணியம்பாடி வரை போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. லட்சக்கணக்கான தொண்டர்கள் திரளுவதால் பாதுகாப்புப் பணிகள் மிகுந்த கவனத்துடன் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பொறுத்தவரை, தமிழக சட்ட ஒழுங்கு கூடுதல் ஏடிஜிபி மாதேஸ்வர் தயால் ஐபிஎஸ் நேரடியாக மேற்பார்வையிடுகிறார். மாநாட்டுத் திடல் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மொத்தம் 3,873 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சிசிடிவி கேமராக்கள் மற்றும் ட்ரோன்கள் மூலம் கண்காணிப்புப் பணிகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. 2026 தேர்தல் வெற்றிக்கான 'வெற்றி முழக்கமாக' இந்த மாநாடு அமையும் என திமுக நிர்வாகிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

ரயிலில் வந்த முதல்வர் ஸ்டாலின்

தேர்தல் பணிகளில் மிக முக்கியப் பங்காற்றும் வாக்குச்சாவடி முகவர்களை ஒருங்கிணைப்பதே இந்த மாநாட்டின் முதன்மை நோக்கமாகும்.

இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காகத் தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் இன்று காலை ரயில் மூலம் ஜோலார்பேட்டைக்கு வந்துள்ளார்.. இதற்காக சென்னை சென்ட்டிரலில் இருந்து பிருந்தாவன் ரயில் மூலம் புறப்பட்டார் முதலமைச்சர்.. சென்னையில் இருந்து ரயில் மூலம் ஜோலார்பேட்டை வந்தடைந்த முதலமைச்சர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது..

திமுக பூத் கமிட்டி மாநாடு

இதையடுத்து, மாநாட்டில் கலந்துகொண்டு பூத் கமிட்டி நிர்வாகிகளுக்குத் தேர்தல் காலப்பணிகள், வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு மற்றும் வாக்குச்சாவடி மேலாண்மை குறித்த முக்கிய ஆலோசனைகளை அவர் வழங்க உள்ளார். பின்னர் மாலை சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் அவர் சென்னை திரும்புகிறார்.

இந்த பிரம்மாண்ட மாநாட்டில் ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் சேலம் உள்ளிட்ட வடக்கு மண்டலத்தைச் சேர்ந்த 47 சட்டமன்றத் தொகுதிகளின் நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்..!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+