கழுகு மலைக்கு வெளிநாட்டு பயணிகள் வருகை... சுற்றுலா துறையால் சிறப்பான வரவேற்பு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தின் கழுகு மலையில் உள்ள சமணர் சிற்பத்தை காண வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர். இன்று சமணர் சிற்பத்தை காண வந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டதால் அவர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

நம் நாட்டு கலாச்சாரத்தைப் பிரபலப்படுத்தவும், வரலாற்று சிறப்பு மிக்க இடங்களை காணவும் சுற்றுலா துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதன்படி வெளிநாட்டு சுற்றுலா குழுக்கள் பல இந்தியாவுக்கு வரவேற்கப்படுகின்றன.

A warm welcome for foreigners in kazhugu malai!

இக்குழுவைச் சேர்ந்த 10க்கும் மேற்பட்டவர்கள் தேர்வு செய்யப்பட்டு நாடு முழுவதும் அழைத்து செல்லப்படுவார்கள். மேலும் இந்தியாவில் உள்ள முக்கிய இடங்களின் வரலாறு மற்றும் பண்பாடுகளை பற்றி அவர்களிடம் எடுத்து கூறப்படும்.

இப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட 10 கொரிய மற்றும் இத்தாலி சுற்றுலா குழுவினர் தமிழகத்தில் பல்வேறு இடங்களுக்க்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர். அவர்கள் இன்று கழுகு மலைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

மதுரையில் இருந்து கன்னியாகுமரி வரை உள்ள இடங்களை பார்வையிட்டு வருகின்றனர். கழுகுமலைக்கு சுற்றுலா வந்த அவர்களுக்கு, சமணர் சிற்பம் உள்ள குகை அருகே சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்குள்ள வெட்டுவான் கோயில், சமணர் பள்ளி, சமணர் சிற்பங்கள் மற்றும் பல்வேறு இடங்களை பார்வையிட்டனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
A warm welcome given by tamilnadu tourism to foreigners. They took to tuticorin dt, and surrounding places.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற