For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நித்தி ஆசிரமத்தில் இருந்து பெண் மீட்பு.. சீடர்களை விரட்டியடித்த மக்கள்!.. ராசிபுரத்தில் பரபரப்பு

Google Oneindia Tamil News

இராசிபுரம்: ராசிபுரம் அருகே காரில் வந்த நித்தியானந்தா சீடர்களை அடித்து விரட்டிய பொதுமக்கள் அந்த காரில் இருந்த பெண்ணை மீட்டனர். இவர் கடந்த 4 ஆண்டுகளாக நித்தியானந்தா ஆசிரமத்தில் இருந்து வந்தார்.

Recommended Video

    நித்தி ஆசிரமத்தில் இருந்து பெண் மீட்பு.. சீடர்களை விரட்டியடித்த மக்கள்!.. ராசிபுரத்தில் பரபரப்பு

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த ஐய்யம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராமசாமி (62). இவர் அதே பகுதியில் உள்ள வீட்டின் ஒரு பகுதியில் மளிகை கடை வைத்துள்ளார். இவரின் மனைவி அத்தாயி (52).

    வீடு மற்றும் கடை அத்தாயின் பெயரில் உள்ளது. இதன் மீது ரூ.6.40 லட்சத்திற்கு வங்கியில் கடன் வங்கியுள்ளனர். அத்தாயி நித்யானந்தாவின் மீது அளவு கடந்த பக்தியின் காரணமாக ரூ.6.40 லட்சம் பணத்துடன் கடந்த 2017ல் பெங்களூரில் உள்ள ஆசிரமத்திற்கு சென்றுவிட்டார். அதன்பின் அத்தாயி வீடு வரவே இல்லை.

    பொதுத்துறை விற்பனை, தாலிபான்கள், பணவீக்கம்- மத்திய அரசு மீது ஆர்.எஸ்.எஸ்.-க்கு அதிருப்தியா? பொதுத்துறை விற்பனை, தாலிபான்கள், பணவீக்கம்- மத்திய அரசு மீது ஆர்.எஸ்.எஸ்.-க்கு அதிருப்தியா?

    வாய்தா முடிந்த நிலை

    வாய்தா முடிந்த நிலை

    இந்த நிலையில், வங்கியில் வாங்கிய கடனுக்கான வாய்தா முடிந்த நிலையில் வீடு ஜப்திக்கு வந்துள்ளது. ராமசாமி கடனுக்கான பணத்தை தயார் செய்து விட்டார். ஆனால், அத்தாயின் கையெழுத்து அவசியம் என்பதால் நித்யானந்தாவின் ஆசிரமத்திற்கு பல முறை பேசிய பிறகே இன்று அத்தாயியை அழைத்து வர சம்மதம் தெரிவித்துள்ளனர்.

    அத்தாயியை அழைத்து வந்த 3 பேர்

    அத்தாயியை அழைத்து வந்த 3 பேர்

    அதன்படி, இன்று அத்தாயியை 3 பேர் காரில் வீட்டிற்கு அழைத்து வந்தனர். இந்த நிலையில், காரை சூழ்ந்து கொண்ட அத்தாயின் கணவர் ராமசாமி, மகன் மற்றும் பொதுமக்கள் அத்தாயியை வேறு காரில் பத்திரமாக அனுப்பி வைத்தனர். இதைத் தொடர்ந்து இரு தரப்புக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    சீடர்கள்

    சீடர்கள்

    இதையடுத்து காரில் வந்த நித்தியின் சீடர்களை பொதுமக்கள் விரட்ட உயிர் பயத்தில் அங்கிருந்து கிளம்பினர். இதனால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சினிமா பாணியில் நடந்த இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    பெண் பக்தர்கள்

    பெண் பக்தர்கள்

    பட்டணம், வடுகம், புதுப்பட்டி என பல பகுதியில் இருந்து பெண்கள் பலரும் நித்தியின் ஆசிரமத்தில் உள்ளனர். அவர்களை மீட்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர். நித்தியானந்தாவின் ஆசிரமத்தில் நிறைய பெண்கள் பக்தர்களாக சென்று அங்கிருந்து வெளியே வராமல் இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

    பெற்றோர்கள்

    பெற்றோர்கள்

    இது தொடர்பாக அந்த பெண்களின் உறவினர்களும் பெற்றோர்களும் புகார் அளித்த வண்ணம் உள்ளனர். நிறைய ஆசிரமங்களில் பெண்கள் தங்க வைக்கப்பட்டு அவர்கள் தங்கள் சொத்துகளையும் ஆசிரமத்தின் பெயருக்கே எழுதி வைக்கும் நிலை உள்ளது. ஏற்கெனவே பாலியல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நித்தியானந்தா தற்போது கைலாசா என்ற தனி நாட்டில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    English summary
    A woman rescued from Nithyananda Ashram while she was coming her hometown.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X