சூலாயுதத்துடன்.. ஜெ.வை பார்க்க அப்பல்லோவுக்குள் அதிரடியாக பாய்ந்த ‘அருள்வாக்கு’ ஜெயந்தி!
சென்னை: சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க, கையில் சூலாயுதத்துடன் அருள் வாக்கு ஜெயந்தி என்பவர் மருத்துவமனையில் அதிரடியாக நுழைய முற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
தமிழக முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரைப் பார்க்க நாள்தோறும் அமைச்சர்கள், அரசு உயர் அதிகாரிகள் மற்றும் அதிமுக நிர்வாகிகள் வந்தவண்ணம் உள்ளனர்.

ஆனால், அவர்கள் அனைவருக்கும் முதல்வரைப் பார்க்க அனுமதி கிடைப்பதில்லை. இதனால் அப்பல்லோ மருத்துவமனை வாசலில் எப்போதும் கூட்டமாகக் காணப்படுகிறது. முதல்வர் சிகிச்சைப் பெற்று வருவதால் மருத்துவமனை வளாகத்தில் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த சூழ்நிலையில், நேற்று இரவு கையில் சூலாயுதம் ஏந்தி, கழுத்தில் ருத்ராட்ச மாலை அணிந்தவாறு வந்த பெண் ஒருவர், மருத்துவமனை வாசலில் திடீரென பக்தி பரவத்துடன் ஆடி அருள்வாக்கு கூறியுள்ளார்.
பின்னர், ஆவேசமாக அவர் மருத்துவமனைக்குள் நுழையவும் முயற்சித்துள்ளார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், அவரைத் தடுத்து நிறுத்தினர்.
பின்னர் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் சேலம் மாவட்டம் அழகாபுரத்தைச் சேர்ந்த அருள்வாக்கு ஜெயந்தி என்பது தெரியவந்தது.
இந்த சம்பவத்தால் மருத்துவமனை வாசலில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications