For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

திமுகவில் இருந்து நீக்கப்பட்டது செயல் தலைவர் பதவி!

By Veera Kumar
Google Oneindia Tamil News

Recommended Video

    திமுக செயல் தலைவர் பதவி நீக்கம் | மறைந்த தலைவர்களுக்கு இரங்கல்- வீடியோ

    சென்னை: திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் பதவியேற்ற நிலையில் அவர் வகித்துவந்த செயல் தலைவர் பதவி, கட்சியில் இருந்து நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

    திமுக தலைவராக இருந்த கருணாநிதி உடல் நலம் குன்றிய நிலையில் அவரால் தீவிர அரசியலில் ஈடுபட முடியாத சூழ்நிலை இருந்தபோது, திமுக விதிகளில் மாற்றம் செய்து செயல் தலைவர் என்ற ஒரு பதவி உருவாக்கப்பட்டு அது ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டது.

    Acting president post will be removed from DMK party

    திமுக தலைவர் என்ற முறையில் கருணாநிதி இருந்ததால் அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக தலைவர் பதவியை தவிர்த்து விட்டு செயல் தலைவராக இருந்து வந்தார் ஸ்டாலின்.

    இந்த நிலையில் இன்று திமுக தலைவராக ஸ்டாலின் பொறுப்பேற்றார். எனவே, 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் உருவாக்கப்பட்டு ஸ்டாலினுக்கு வழங்கப்பட்ட திமுக செயல் தலைவர் பதவி அகற்றப்பட்டது.

    திமுக செயல் தலைவர் பதவிக்கான கட்சி விதி பிரிவு 4 நீக்கப்பட்டதாக பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவித்தார்.

    திமுகவின் முக்கிய பொறுப்புகளாக தலைவர், பொருளாளர், பொதுச்செயலாளர் ஆகியவையே வழக்கம்போல தொடருகின்றன.

    இதேபோல திமுக விதிமுறைகளில் மேலும் சில மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மாவட்ட கழக அலுவலகங்கள், மாவட்ட தலைநகரங்களில்தான் அமைய வேண்டும், அதனுடன் நூலகம் அமைய வேண்டும் என்பது உள்ளிட்ட சில மாற்றங்கள் செய்யப்பட்டன.

    English summary
    Acting president post will be removed from DMK party, as MK Stalin become party chief, says sources.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X