Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ராமேஸ்வரம் சென்றடைந்தார் நடிகர் கமல்... உற்சாக வரவேற்பு!

நாளை அரசியல் கட்சி தொடங்கும் நடிகர் கமல்ஹாசன் ராமேஸ்வரம் சென்றடைந்தார்.

Subscribe to Oneindia Tamil

ராமேஸ்வரம்: நாளை புதிய அரசியல் கட்சி தொடங்கும் நடிகர் கமல்ஹாசன் ராமேஸ்வரம் சென்றடைந்தார். அவருக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

முழு நேர அரசியல்வாதியாக மாறும் நடிகர் கமல்ஹாசனின் அரசியல் விஸ்வரூபமெடுக்கும் முக்கியமான நாள் நாளை. ராமேஸ்வரத்தில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் வீட்டில் இருந்து தனது அரசியல் பயணத்தை அதிகாரப்பூர்வமாக தொடங்குகிறார் கமல்ஹாசன். காலை 7.45 மணியளவில் அப்துல் கலாமின் இல்லத்தில் இருந்து அரசியல் பயணம் தொடங்குவதாக கமல் அறிவித்துள்ளார்.

Actor Kamalhaasn received warm welcome at Rameswaram

இதற்காக மதுரைக்கு விமானம் மூலம் சென்றடைந்த கமல் சாலை மார்க்கமாக ராமேஸ்வரம் சென்றடைந்தார். ராமேஸ்வரம் சென்றடைந்த கமலுக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். காலையில் கலாம் வீட்டில் இருந்து அரசியல் பயணத்தை தொடங்கும் கமல், தொடர்ந்து கலாமின் நினைவிடம் அவர் பயின்ற பள்ளி, மீனவர்களுடன் பேச்சுவார்த்தை என திட்டமிட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாலையில் மதுரையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கட்சிக்கொடியை கமல் அறிமுகம் செய்து வைக்கிறார். இதனைத் தொடர்ந்து கட்சியின் கொள்கைகளை கமல்ஹாசன் அறிவிக்க உள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+