For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பிரபல நடிகர் "மீசை ராஜேந்திரன்" அத்துமீறல்?.. கார் கண்ணாடியை உடைத்த மக்கள்.. கோயிலுக்குள் என்னாச்சு?

நடிகர் ராஜேந்திரன் மீது முக்கூடல் போலீசில் புகார் தரப்பட்டுள்ளது

Google Oneindia Tamil News

நெல்லை: புதுபிரச்சனை ஒன்று கிளம்பி உள்ளது.. பிரபல நடிகர் மீது பெண்கள் பரபரப்பு புகார் அளித்துள்ள சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

Recommended Video

    பிரபல நடிகர் மீசை ராஜேந்திரன் அத்துமீறல்?.. கார் கண்ணாடியை உடைத்த மக்கள்

    நடந்தது என்ன?

    நெல்லை மாவட்டம் முக்கூடல் தாமிரபரணி ஆற்றங்கரையில் முத்துமாலை அம்மன் கோவில் அமைந்துள்ளது.. இந்த கோயிலின் திருவிழா வருகிற ஜூலை 3-ந்தேதி தொடங்கி நடைபெற உள்ளது.

    இந்த நிலையில் நடிகர் ராஜேந்திரநாத் அங்கே கோயிலுக்குள் வந்துள்ளார்.. தமிழ் திரைப்படங்களில் வில்லனாகவும், குணச்சித்திர நடிகராகவும் நடித்து வருபவர் நடிகர் ராஜேந்திரநாத்..

    போலி விளம்பரம் மூலம் மோசடி! கல்வியை விளம்பரமாக்குவது நல்லதில்லை! ட்விட்டரில் சூடான நடிகர் சூரி..! போலி விளம்பரம் மூலம் மோசடி! கல்வியை விளம்பரமாக்குவது நல்லதில்லை! ட்விட்டரில் சூடான நடிகர் சூரி..!

    சூளைமேடு

    சூளைமேடு

    இவரும் முக்கூடல் பகுதியைச் சேர்ந்தவர்தான்.. மீசை ராஜேந்திரன் என்று சினிமாவில் அழைப்பார்கள்.. இவர், இப்போது சென்னை சூளைமேட்டில் வசித்து வருகிறார்... கடந்த 2 நாளைக்கு முன்பு சொந்த ஊரில் நடந்த நிகழ்ச்சிக்காக வந்திருக்கிறார்.. அப்போதுதான், முத்துமாரியம்மன் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய குடும்பத்துடன் சென்றுள்ளார்.. கோவிலில் வெள்ளையடித்து கொண்டிருந்தவர்களிடம், யாரிடம் அனுமதி கேட்டு வெள்ளையடிக்கிறீர்கள் என்று கேட்டதாக கூறப்படுகிறது.

     குளத்தில் பெண்கள்

    குளத்தில் பெண்கள்

    இந்த கோயிலில் வெள்ளை அடிக்கும் பணிக்கு, யாரிடம் அனுமதி பெற்றீர்கள்? என்று கேட்டு, செல்போனில் கோவிலை சுற்றி வீடியோ எடுத்தவாறே சென்றாராம்.. அப்போது குளத்தில் பெண்கள் குளித்ததையும் நடிகர் ராஜேந்திரநாத் படம் எடுத்ததாக கூறப்படுகிறது... இதன் காரணமாக அவருக்கும், மற்றொரு தரப்பினருக்கும் வாய்தகராறு ஏற்பட்டுள்ளது.. தொடர்ந்து அங்கிருந்து குடும்பத்துடன் கிளம்பிய நடிகர் ராஜேந்திரநாத் முக்கூடல் ஸ்டேஷனுக்குள் தஞ்சமடைந்துள்ளார். தன்னை சிலர் தாக்க வந்ததாகவும் புகார் கொடுத்தார்.

     நடிகர் மனு

    நடிகர் மனு

    ராஜேந்திரன் கோயிலுக்குள் நுழைந்து கேள்வி கேட்டதுமே, அங்கிருந்த ஊழியர்கள், விழாக்குழுவினரிடம் இதை தெரிவித்துள்ளனர்.. ராஜேந்திரன் கோயிலுக்குள் தகராறு செய்த விஷயம், அதற்குள் ஊரெல்லாம் பரவி, மக்கள் கோயிலுக்கு வந்துவிட்டனர்.. விழாக்குழுவினரும், கோயிலுக்கு விரைந்தனர்.. ராஜேந்திரனிம், ஏன் இப்படி நடந்து கொள்கிறீர்கள் என்று கேட்டனர்.. ஆனால், அதற்கு சரியாக பதில் சொல்லாமல், ராஜேந்திரன் காரில் ஏறி அங்கிருந்து சென்று விட்டாராம்.. இந்த சூழலில்தான், முக்கூடல் போலீஸிற்கு சென்ற ராஜேந்திரன்,

    செக்யூரிட்டி

    செக்யூரிட்டி

    ஆனால், விழாக்குழுவினரும், அந்த ஊர் மக்களும் வேறு விதமாக சொல்கிறார்கள்.. ராஜேந்திரன் எப்போது கோயிலுக்கு வந்தாலும் இப்படித்தான் பிரச்சனை செய்கிறார்.. விழாக்காலங்களில் இப்படி நடந்து கொள்கிறார்.. அதனால், திருவிழா இந்த வருடம் நல்ல முறையில் நடப்பதற்கு எங்களுக்கு உரிய பாதுகாப்பு தர வேண்டும் சொல்லி, போலீஸ் மற்றொரு புகார் மனு தரப்பட்டுள்ளது..

     கார் கண்ணாடி

    கார் கண்ணாடி

    இந்த இரு மனுக்களையும் விசாரித்த போலீசார், அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்... இதனிடையே, மறுபடியும் முக்கூடலுக்கு ராஜேந்திரன் வந்தபோது, பொதுமக்கள் அவரிடம் தகராறு செய்ததாகயும், கார் கண்ணாடியை சிலர் உடைத்து விட்டதாகவும் சொல்லி, எஸ்பி அலுவலகத்தில் ராஜேந்திரன் இன்னொரு புகார் செய்திருக்கிறார்.. இந்த விஷயம் கேள்விப்பட்ட முக்கூடல் ஊர் பொதுமக்கள், இரவு நேரம் என்றும் பாராமல் ஒன்று திரண்டு, நடிகர் ராஜேந்திரன் மீதான எங்கள் புகார் மனு குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி போராட்டம் நடத்தினர். போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    வீடியோ

    வீடியோ

    இந்த கோயில் விவகாரத்தை பொறுத்தவரை உண்மையிலேயே என்ன நடந்தது? இந்த முத்துமாரியம்மன் கோவில் அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் இருக்கிறது.. கடந்த 2009 -ம் ஆண்டு நடைபெற்ற ஆனித்திருவிழாவின் போது ஒருநாள் கலை நிகழ்ச்சியை, நடிகர் ராஜேந்திரன் நடத்தி உள்ளார்.. அப்போது கலை நிகழ்ச்சியை அரசியல் மேடையாக மாற்றியதாக கூறி இப்பகுதியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மேலும் அப்போது ராஜேந்திரனுக்கு, முதல் மரியாதை கொடுக்கவில்லை என்றும் சொல்லப்படுகிறது.

    பணமோசடி

    பணமோசடி

    இதனிடையே, கோவிலில் உண்டியல் மேல் உண்டியல் வைத்து வசூல் செய்தால், அர்ச்சனை சீட்டு என பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக இப்பகுதியை சேர்ந்தவர்கள் மீது பல்வேறு வழக்குகளை ராஜேந்திரன், தொடர்ந்தார். மதுரை ஹைகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்து, பல்வேறு தீர்ப்புகள் ராஜேந்திரனால் பெறப்பட்டும் உள்ளது... இந்த நிலையில் நீதிமன்ற தீர்ப்பைமீறியும், யாரிடமும் அனுமதி பெறாமலும், கோவிலை புனரமைக்கும் பணியில் சிலர் ஈடுபட்டதாக தெரிகிறது..

    வாக்குவாதம்

    வாக்குவாதம்

    அதனால்தான், யாரிடம் அனுமதி பெற்று வெள்ளை அடிக்கிறீர்கள் என்று ராஜேந்திரன் கேட்டுள்ளதாக தெரிகிறது.. அதாவது, நீதிமன்ற தீர்ப்பு மற்றும் முன் அனுமதி பெறாமல் ஏன் செய்கிறீர்கள் என்று கேள்வி கேட்டதுடன், அங்கு அனுமதி இல்லாமல் நடந்து வரும் பணிகளை வீடியோ எடுத்துள்ளார்.. இதற்குதான் விழா குழுவினர் வாக்குவாதம் செய்தார்கள்.. அந்த வாக்குவாதம்தான் கார் கண்ணாடியைஅடித்து நொறுக்கும்வரை சென்றுள்ளது.. இதுவிஷயத்தில், போலீஸ்தான் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள்.

    English summary
    actor rajendranath issue and what happned in thirunelveli mukkoodal temple நடிகர் ராஜேந்திரன் மீது முக்கூடல் போலீசில் புகார் தரப்பட்டுள்ளது
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X