மூக்கு தரைல நசுங்கற அளவுக்கு ஏன் வைச்சிருந்தாங்கன்னு இப்ப புரியுது.. எஸ்.வி.சேகர் நக்கல்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
  மூக்கு தரைல நசுங்கற அளவுக்கு ஏன் வைச்சிருந்தாங்கன்னு இப்ப புரியுது.. எஸ்.வி.சேகர்- வீடியோ

  சென்னை: நாக்குல சனி நடனமாடுகிறார் என தம்பிதுரையை நடிகரும் பாஜக பிரமுகருமான எஸ்வி சேகர் சரமாரியாக சாடியுள்ளார்.

  எஸ்வி சேகர் டிவிட்டர் வாயிலாக அரசியல் தொடர்பாக பல்வேறு விமர்சனங்களை கூறி வருகிறார். பாஜக பிரமுகரான எஸ்வி சேகர் எதிர்க்கட்சிகளையும் தனது டிவிட்டுகள் மூலமாக வாரி வருகிறார்.

  மேலும் நடிகர்கள் அரசியலுக்கு வருவதையும் அவர் ஆதரித்து வருகிறார். சசிகலா குடும்பத்தில் நடைபெறும் வருமான வரித்துறை ரெய்டு மற்றும் அதிமுக எம்பியான தம்பிதுரையின் பேச்சு குறித்தும் எஸ்வி சேகர் விளாசியுள்ளார்.

  காலடியிலேயே வச்சிருந்தாங்க

  ஜெயலலிதாவின் கொள்கை வழியிலே மத்தியில் உள்ள பா ஜ க அரசு செயல்படுகின்றது. என துணை சபாநாயகர் தம்பிதுரை பேசியதை அவரது பேத்தல் பேச்சு என சாடியுள்ளார் எஸ்விசேகர். இவர்களை இத்தனை வருஷம் பேச விடாம காலடியிலேயே மூக்கு தரைல நசுங்கற அளவுக்கு ஏன் வைச்சிருந்தங்கன்னு இப்பதான் புரியுது என்றும் எஸ்வி சேகர் தனது டிவிட்டில் கூறியுள்ளார்.

  நாக்கில் சனி நடனமாடுகிறார்

  ஜெயலலிதா எதிர்ப்பாலேயே மத்திய அரசு ஜிஎஸ்டியை குறைத்துள்ளதாக தம்பிதுரை கூறியதை தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள தம்பிதுரை இந்த ஆண்டின் நகைச்சுவையும் உச்ச கட்ட உளரலும் என தெரிவித்துள்ளார். மேலும் தம்பிதுரையின் நாக்கில் சனி நடனமாடுகிறார் என்றும் அவர் கூறியுள்ளார்.

  தகுதி கிடையாது

  அரசியல்வாதின்னா கோவணத்தோட அலையனுமா என்று டிடிவி தினகரன் கேட்ட செய்தியை தனது டிவிட்டர் பேஜில் போஸ்ட் செய்துள்ள எஸ்வி சேகர், திருட்டு அரசியல்வியாதிகளின் கோவணம் கூட அகற்றப்படும் என தெரிவித்துள்ளார். நேர்மயான அரசியல்வாதிகள் கோட்சூட்டுடன் கம்பீரமாக இருக்கலாம். திருடனைப்பிடிக்க வர போலீஸ் எந்த கார்ல வரணும்னு சொல்ற தகுதி பிடிபடற குற்றவாளிக்கு கிடையாது என்றும் விளாசியுள்ளார் எஸ்வி சேகர்.

  காந்தியை அசிங்கப்படுத்தாதீங்க

  நான் காந்தியின் பேரன் இல்லை என்றும், எங்களை குறை சொல்பவர்கள் காந்தியின் பேரன் பேத்திகள் இல்லை என்றும் டிடிவி தினகரன் கூறியிருந்தார். அதற்கு பதிலடி கொடுத்துள்ள எஸ்வி சேகர்,
  தயவு செஞ்சு அப்படி பேசி காந்தியை அசிங்கப்படுத்திடாதீங்க என தெரிவித்துள்ளார். நாட்டுல எத்தனையோ பேர் எச்சி தொட்டு பையில இருக்கிற 100,200₹ திரும்ப திரும்ப எண்ணும் போது, உங்க 187 இடத்துல எத்தனை நோட்டு எண்ற மிஷின் இருந்திச்சுன்னு சொல்றீங்களா.. என கேட்டுள்ளார் எஸ்வி சேகர்.

  வரிஏய்ப்பும் தீவிரவாதம்தான்

  மாறுவேடத்தில் வந்து பிடிக்க நாங்கள் என்ன தீவிரவாதியா என கேட்டார் சிஆர் சரஸ்வதி. அதுகுறித்து நக்கல் அடித்துள்ள எஸ்வி சேகர், ஒரு ஐடி ஆபீசர் கன்னத்துல மரு இருந்திச்சு. அதை மாறுவேஷம்ன்னு நினைச்சுட்டாங்க சிஆர் சரஸ்வதி என தெரிவித்துள்ளார். கருப்புப்பணம்,கள்ளப்பணம்,வரி ஏய்ப்பு,பினாமி சொத்து,போலி கம்பெனி இதெல்லாமும் நாட்டுக்கு எதிரான தீவிரவாதம்தான் என்றும் தனது டிவிட்டில் அவர் கூறியுள்ளார்.

  வருமானத்திற்கு மட்டும்தான் சம்மந்தம்

  அதிமுக அரசுக்கும், வருமானவரித்துறை சோதனைக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது என அமைச்சர் ஜெயக்குமார் கூறியிருந்தார். அதற்கு பதில் அளித்துள்ள எஸ்வி சேகர், சரிதான் அதிமுகவினருக்கும் வருமானத்திற்கும் மட்டுமே ஒரே சம்மந்தம் உள்ளது என்று கூறியுள்ளார்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Actor SV Shekar slams ADMK MP Thambidurai and TTV Dinakaran. He said tax evasion also a kind of terrorism.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற