மெரினாவும் வாடிவாசலும் சேர்ந்துதான் மெர்சல் படமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் விஜய் நடிக்கும் அவரது 61 படத்தின் பெயர் மெர்சல். மெர்சல் என்ற வார்த்தை மெரினா+ வாடிவாசல் இரண்டையும் சேர்த்து உருவானது என கூறப்படுகிறது.

இயக்குநர் அட்லி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் புதிய படத்தின் பெயர் மெர்சல் என போஸ்டர் வெளியானதிலிருந்து அப்படத்தைக் குறித்து பல்வேறு செய்திகள் உலா வந்துகொண்டிருக்கின்றன.

Actor Vijay's 61st film Mersal talk abou Jalllikattu

மெர்சல் என்ற வார்த்தை, மெரினா மற்றும் வாடிவாசல் என்கிற வார்த்தைகளில் இருந்து உருவாகியுள்ளது என்றும், மெரினாவிலில் இருந்து முதல் இரண்டு எழுத்தான 'மெரி' யும், வாடிவாசல் வார்த்தையிலிருந்து கடைசி இரண்டு எழுத்துக்களான 'சல்' சேர்ந்து மெர்சல் என உருவாக்கப்பட்டுள்ளது.

ஆகவே விஜய்யின் 61ஆவது படமான மெரிசல் ஜல்லிக்கட்டு பற்றிய படம் என அவரது ரசிகர்கள் தங்கள் கருத்தை வலைதளங்களில் சந்தோஷத்துடன் எழுதி வருகிறார்கள். போஸ்டரில், 'மெர்சல்' என்ற வார்த்தை கூட காளையின் உருவத்தை ஒத்தே வடிவமைக்கப்பட்டிருக்கிறது என்பதால் இது ஜல்லிக்கட்டு குறித்த படம் தான் என அடித்து சொல்லி வருகிறார்கள் விஜய் ரசிகர்கள். கடந்த ஜனவரி மாதம் மெரினாவில் ஜல்லிக்கட்டுக்காக நடந்த போராட்டம் உலகையே திரும்பிப் பார்க்க வைத்தது குறிப்பிடத்தக்கது.

இதுவரை இளைய தளபதியாக இருந்த விஜய்ய்யை, இந்த மெர்சல் பட போஸ்டரில் தளபதி விஜய் என குறிப்பிட்டுள்ளார்கள். திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினையும் தளபதி என்றே அழைக்கிறார்கள். இதை வைத்து வழக்கம் போல், நெட்டீசன்கள் தங்கள் நையாண்டியை கடைவிரிக்கிறார்கள்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Mersal, actor Vijay's 61st film will be directed by Atlee. Mersal a word coined from Marina and Vaadivasal and it talk about Jallikattu saying Vijay's fans.
Please Wait while comments are loading...