For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பாஜக- அதிமுக கூட்டணிக்கு முன்னோட்டமா "நீலகிரி நிராகரிப்பு" டிராமா?

By Mathi
|

சென்னை: நீலகிரி பாரதிய ஜனதா வேட்பாளர் குருமூர்த்தியின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதன் பின்னணியில் பாஜக- அதிமுக இடையேயான கூட்டணி மலர்ந்துவிட்டதுதான் காரணம் என்றும் கூறப்படுகிறது.

லோக்சபா தேர்தலில் அதிமுக வீழ்த்த வேண்டும் என்று குறி வைத்திருப்பவர்களில் நீலகிரியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ஆ. ராசாவும் ஒருவர். ஆனால் தொகுதி நிலவரமோ ஆ. ராசாவுக்கே சாதகமாக இருந்து வருகிறது.

ஆ. ராசாவின் எதிர்ப்பு வாக்குகளள அதிமுகவும் பாஜகவும் பங்கு போடுவதால் அவர் வெல்வது எளிதான ஒன்றாக இருக்கும் என்பதும் ஒரு கணக்கு. இதனால்தான் பாரதிய ஜனதா வேட்பாளரை அதிமுக 'விலைக்கு' வாங்கிவிட்டது என்ற தகவல்கள் கசிந்தது.

ஏதோ நடந்திருக்கிறது..

ஏதோ நடந்திருக்கிறது..

அதே நேரத்தில் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் இல. கணேசனோ, அப்படியெல்லாம் எங்கள் கட்சி வேட்பாளர் கட்சிக்கு துரோகம் செய்ய மாட்டார் என்று சொல்லி 'ஏதோ' நடந்திருப்பதை உறுதி செய்திருக்கிறார்.

ஜெ. கேட்டார்?

ஜெ. கேட்டார்?

தற்போது ஆ. ராசாவை வீழ்த்த வேண்டும் என்பதற்காக பாஜக மேலிடத்திடம் நேரடியாக ஜெயலலிதாவே பேசியிருப்பதாக கூறப்படுகிறது. அதனடிப்படையில்தான் நீலகிரி தேர்தல் களத்தில் குளறுபடியாகி பாஜக தேர்தல் களத்தைவிட்டுக் கொடுத்திருக்கிறதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கட்சி நடவடிக்கை இல்லை..

கட்சி நடவடிக்கை இல்லை..

அதனால்தான் நீலகிரி வேட்பாளர் குருமூர்த்தி மீது பாஜக, கட்சி ரீதியாக எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.. அத்துடன் அவரை பாதுகாக்கும் வகையில் பேட்டிகளைக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்றும் சுட்டிக்காட்டப்படுகிறது.

அதிமுக- பாஜக கூட்டணி

அதிமுக- பாஜக கூட்டணி

லோக்சபா தேர்தலுக்குப் பின்னர் அதிமுக- பாஜக இடையேதான் கூட்டணி அமையும் என்பதெல்லாம் போய் இப்போதே கூட்டணி அமைந்துவிட்டது என்கின்றனர் அதிமுக நிர்வாகிகள்.

English summary
Sources said thad, After ADMK formally appeal to BJP to withdraw their candidate from Nilgiris then only nomination paper confusing there.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X