அதிமுகவினரின் தீபாவளிக் கொண்டாட்டம் இன்றே தொடங்கியது!
சென்னை: அடேங்கப்பா.. தாயைப் பிரிந்து தவித்த குட்டிக் குழந்தை, மீண்டும் தன் தாயைக் கண்டபோது எப்படித் துடித்து துவளுமோ, அதுபோல துள்ளிக் குதிக்கிறார்களே அதிமுகவினர்.. அந்த அளவுக்கு அவர்களின் கொண்டாட்டத்தில் துள்ளல் தெரிகிறது. தீபாவளியை இன்றே அவர்கள் ஆரம்பித்து விட்டனர். கொட்டும் மழையிலும் குத்தாட்டத்துடனும், ஆரவார கூச்சலுடனும் அதிமுகவினர் தங்களது 6 நாள் தீபாவளியை இன்றே ஆரம்பித்து வி்ட்டனர்.
21 நாட்களாக நட்டாற்றில் விடப்பட்டவர்கள் போன்ற நிலைக்கு ஆளாகியிருந்தார்கள் அதிமுகவினர். ஆட்சி கையில், அதிகாரம் கையில்.. ஆனாலும் என்ன செய்வது என்று தெரியாமல், அத்தனை பேரின் இளக்காரம், கிண்டல், கேலி, விமர்சனங்கள் என்று பெரும் துயரத்தில் மூழ்கிப் போயிருந்தனர் அதிமுகவினர்.

ஆனால் அத்தனை வருத்தத்தையும் உச்சநீதிமன்ற உத்தரவு இன்று துடைத்து விட்டது. ஜெயலலிதாவுக்கு ஜாமீன் கிடைத்து விட்டது என்ற தகவல் பரவியதும் சென்னையில் மழையையும் பொருட்படுத்தாமல் அதிமுகவினர் வீதிகளில் உற்சாகக் கொண்டாட்டங்களில் குதித்து விட்டனர்.
சென்னை மட்டுமல்ல தமிழகம் முழுவதும் இதே நிலைதான். எங்கு பார்த்தாலும் அதிமுகவினர் கொண்டாட்டமாக உள்ளது.

தீபாவளியை வருத்தத்துடன் கொண்டாட வேண்டி வருமோ என்ற பெரும் கவலையிலும், அதிமுக தொடங்கப்பட்ட 43 ஆண்டு விழாவை கொண்டாட முடியாமல் போய் விட்டதே என்ற வருத்தத்திலும் மூழ்கிக் கிடந்த அதிமுகவினருக்கு இன்று இரட்டிப்பு சந்தோஷத்தைக் கொடுத்து விட்டது உச்சநீதிமன்ற உத்தரவு.
இதுவரை அடக்கி வைத்திருந்த அத்தனை கொண்டாட்டத்தையும் மொத்தமாக சேர்த்து வட்டியும் முதலுமாக கொண்டாடி வருகின்றனர் அதிமுகவினர்.
எல்லோருக்கும் தீபாவளி 22ம் தேதிதான். ஆனால் அதிமுகவினருக்கோ அது ஆறு நாள் தீபாவளியாக மாறியுள்ளது. ஆம். இன்றே அவர்கள் தீபாவளியைக் கொண்டாட ஆரம்பித்து விட்டனர்.
-
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications