For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜெ.வைப் பார்த்த கையோடு திருப்பதிக்குப் படையெடுத்த அதிமுக வேட்பாளர்கள் .. ஏன் தெரியுமா?

|

சென்னை: அதிமுக சார்பில் அறிவிக்கப்பட்ட வேட்பாளர்கள் சிலர் திருப்பதிக்கு சென்றுள்ளனர். முதல்வர் ஜெயலலிதாவைப் பார்த்து ஆசி பெற்ற பின்னர் அவர்கள் திருப்பதிக்குத்தான் படையெடுத்துள்ளனர்.

வேறு எங்குமே போகாமல் சத்தம் போடாமல் இவர்கள் அத்தனை பேரும் திருப்பதிக்குக் கிளம்பிப் போனார்களாம்..

ஏன் என்று விசாரித்துப் பார்த்தால் ரொம்பவே சுவாரஸ்யமான காரணம் தெரிய வந்தது.

40 வேட்பாளர்கள்

40 வேட்பாளர்கள்

லோக்சபா தேர்தலில் அதிமுக சார்பில் தமிழகம் மற்றும் புதுவையில் 40 தொகுதிகளுக்கும் அதிரடியாக வேட்பாளர்களை அக் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிவித்தார்.

புதுமுகங்கள் அதிகம்

புதுமுகங்கள் அதிகம்

வேட்பாளர்களில் பெரும்பாலானவர்கள் புதுமுகங்கள்தான். பழையவர்களில் சிலருக்கே வாய்ப்பு கிடைத்துள்ளது.

அமாவாசையன்று அம்மாவிடம் ஆசி

அமாவாசையன்று அம்மாவிடம் ஆசி

இந்த நிலையில், நேற்றைய தினம் அமாவாசை என்பதால், அதிமுக சார்பில்
அறிவிக்கப்பட்ட வேட்பாளர்களை சென்னைக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் முதல்வர் ஜெயலலிதாவை தனித்தனியாக சந்தித்து ஆசி பெற்றனர்.

அடுத்து திருப்பதிக்கு ஓடு

அடுத்து திருப்பதிக்கு ஓடு

இந்த சந்திப்பைத் தொடர்ந்து வேட்பாளர்களில் ஒரு குழுவினர், மொத்தமாக திருப்பதிக்கு போயுள்ளனராம்.

எதற்காக தெரியுமா

எதற்காக தெரியுமா

இவர்களின் திருப்பதி விஜயத்திற்கு முக்கியக் காரணம், வேட்பாளர் பட்டியல் இப்படியே இருக்க வேண்டும், அம்மா மனது மாறி விடக் கூடாது, நம்மை வேட்பாளர் பட்டியலிலிருந்து நீக்கி விடக் கூடாது, கூட்டணிக் கட்சிக்கு நமது தொகுதியை ஒதுக்கி விடக் கூடாது என்று ஏழுமலையானிடம் வேண்டிக் கொள்ளவே இந்தப் பயணமாம்.

அடடே..!

English summary
Some of the ADMK candidates rushed to Tirupathi for darshan after meeting CM Jayalalitha.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X