For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பாஜகவுடன் கூட்டணி அமைத்தால் எப்படி?: சர்வே நடத்துகிறது அதிமுக

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் இடதுசாரிகட்சிகளுடன் கூட்டணி அமைப்பதைவிட பாரதிய ஜனதாவுடன் இணைந்து தேர்தலை சந்திப்பதில் திடீரென அதிமுக ஆர்வம் காட்டி வருவதாக தெரிகிறது.

லோக்சபா தேர்தலுக்கான கூட்டணியில் ஒவ்வொரு நாளும் புதிய புதிய திருப்பம் ஏற்பட்டு வருகிறது. திமுக அணியில் தேமுதிக இடம்பெறும் என்ற நிலை இருந்தது. பின்னர் திமுக அணியில் தேமுதிக, காங்கிரஸ் ஆகியவை இணையும் என்று கூறப்பட்டது.

admk and bjp

ஆனால் தற்போதைய நிலையில் திமுக அணியில் இந்த இரு கட்சிகளும் இணையாது என்றே தெரிகிறது. அதேபோல் அதிமுக அணியில் தொடக்கத்தில் பாஜக இணையலாம் என்று கூறப்பட்டது. ஆனால் பின்னர் இடதுசாரிகள் தாங்களாகவே அதிமுக அணியில் இருக்கிறோம் என்று அறிவித்துக் கொண்டனர்.

இந்நிலையில் திடீர் திருப்பமாக, இடதுசாரிகளைவிட பாரதிய ஜனதா, மதிமுக, பாமக ஆகியவற்றுடன் கூட்டணி அமைத்தால் வாக்கு சதவீதம் அதிகரிக்கும் என்ற கணக்கும் அதிமுக தலைமையால் போடப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இதனால் இடதுசாரிகளுடன் கூட்டணியா? அல்லது பாஜக- மதிமுக- பாமகவுடன் கூட்டணியா? எதன் மூலம் லாபம் என்ற சர்வேயை நடத்த அதிமுக தலைமை உத்தரவிட்டிருப்பதாக கூறப்படுகிறது.

English summary
ADMK condut a survey on alliance with BJP, MDMDK and PMK. sources said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X