விரைவில் ஆட்சி கவிழும்.. ஓபிஎஸ் ஆதரவு செம்மலை ஆருடம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சேலம்: எடப்பாடி பழனிச்சாமி அணி எம்.எல்.ஏ.,க்களிடம் ஒற்றுமை இல்லாததால் தமிழகத்தில் ஆட்சி விரைவில் கவிழும் என ஓபிஎஸ் அணி எம்.எல்.ஏ. செம்மலை தெரிவித்தார்.

சேலத்தில் ஒருங்கிணைந்த மாவட்ட ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின்னர் மேட்டூர் தொகுதி எம்எல்ஏ செம்மலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் ஊழல் நிறைந்து இருப்பதாக நடிகர் கமல் ஹாசன் கூறியதில் எந்த தவறும் இல்லை. அவர் கருத்தை நாங்கள் ஆதரிக்கிறோம்.

ADmk government collapsed very soon, says Semmalai
Edapadi Plays Drama Says OPS-Oneindia Tamil

எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசுக்கு அதிமுக தொண்டர்களிடமும் மக்களிடமும் ஆதரவு இல்லாததால்தான் உள்ளாட்சித் தேர்தலை சந்திக்க அஞ்சி வருகின்றனர். பழனிச்சாமி ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் 122 பேரிடம் ஒற்றுமை இல்லை. அதற்கான நடவடிக்கைகளை அவர்களே செய்து வருகின்றனர். அணிகள் இணைப்புக்கு சாத்தியமே இல்லை என்றார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
OPs supporter Semmalai mla says, ADmk government collapsed very soon.
Please Wait while comments are loading...