'அம்மா' விடுதலைக்காக தினசரி அங்கப்பிரதட்சணம் செய்யும் எம்.எல்.ஏ காமராஜ்
கரூர்: சொத்துக்குவிப்பு வழக்கில் கைதாகி பெங்களூர் சிறையில் இருக்கும் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா விடுதலையாக வேண்டி தினந்தோறும் சுவாமிக்கு அபிஷேகம், அங்கபிரதட்சனம், விரதம் என பல்வேறு வேண்டுதல்களை செய்து வருகிறார் கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ எஸ்.காமராஜ்
வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் கடந்த மாதம் 27 ம் தேதி ஜெயலலிதாவிற்கு கர்நாடகா சிறப்பு நீதிமன்றம் 4 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது. இதனையடுத்து அவர், பெங்களூர் பார்ப்பன அங்கஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
கடந்த செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி தொடங்கி இப்போது வரை தமிழகம் மற்றும் பாண்டிச்சேரியில் அ.தி.மு.க வினர் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா விடுதலையாக வேண்டி கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ எஸ்.காமராஜ் தினமும் ஒரு கோவில் என அபிஷேகம், ஆராதனைகள் செய்து வருகிறார்.
அங்கப்பிரதட்சணம் செய்யும் எம்.எல்.ஏ காமராஜ் படங்கள்

கூட்டு பிராத்தனை
கரூர் மஹா மாரியம்மன் கோயில், கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோயில், நெரூர் அக்னீஸ்வரர் திருக்கோயில், ஸ்ரீ லெஷ்மி நாராயண திருக்கோயில், அபயபிரதான ரெங்க நாத சுவாமி கோயில், கிருஷ்ணராயபுரம் திருக்கண்மாலிஸ்வரர் திருக்கோயில் என பல கோயில்களில் வழிபாடு செய்து செய்து வருகிறார்.

பள்ளிவாசல், சர்ச்
கரூர் ஈத்ஹா பள்ளிவாசலிலும், கரூர் புனிதா தெரசா சர்ச்- ல் கூட்டு பிரார்த்தனையும் செய்து வருகிறார்.

அங்கப்பிரதட்சணம்
தொடர்ந்து கரூர் மாவட்டதில் நெரூர் சதாசிவ பிரமேந்திராள் கோயிலில் அங்கப்பிரதட்சனை நிகழ்ச்சியிலும் ஈடுபட்டார்.

உண்ணாவிரதம்
மேலும் தினமும் வீட்டில் இருந்த படியே மக்கள் முதல்வர் ஜெயலலிதா விடுதலையாக வேண்டி விரதம் இருந்து வருகிறார். ஜெயலலிதா விடுதலையாக வேண்டி தினமும் ஏறாத கோயில் இல்லை, கோயில், மசூதி, சர்ச் என பல பிரார்த்தனைகள், விரதங்கள் என அற வழியில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

ஏழைகளுக்கு உதவி
அ.தி.மு.க எம்.எல்.ஏ எஸ்.காமராஜ் எம்.எல்.ஏவாக பதவியேற்றதில் இருந்து இதுவரை தான் வாங்கிய மாத சம்பளத்தொகையை ஜெயலலிதா பெயரில் தானமாகக் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications