அமைச்சர் விஜயபாஸ்கரை எதிர்த்த அதிமுக எம்.எல்.ஏ.. சட்டசபையில் பரபரப்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சட்டசபையில் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் பேசிய போது அதிமுக எம்.எல்.ஏ தோப்பு வெங்கடாசலம் அவரை எதிர்த்து பேசி இருக்கிறார். ஆரம்ப சுகாதார நிலையம் குறித்த சி.விஜயபாஸ்கரின் கருத்திற்கு தோப்பு வெங்கடாசலம் எதிராக பேசியுள்ளார்.

தமிழகத்தில் தற்போது சட்டசபை கூட்டம் விறுவிறுப்பாக நடந்து கொண்டு இருக்கிறது. அவைக்கு தினகரன் செல்வது, ஓகி புயல், போக்குவரத்து ஊழியர்கள் பிரச்சனை என தினமும் அவை அனல் பறக்கிறது.

ADMK MLA opposes ADMK Minister in assembly

இந்த நிலையில் இன்று அவையில் மிக முக்கியமான சம்பவம் ஒன்று நடந்து இருக்கிறது. சுகாதார துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தமிழகத்தில் இருக்கும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் குறித்து பேசினார்.

அப்போது ஈரோடு மாவட்டத்தில் இருக்கும் விஜயமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்த தேவையில்லை என்று அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கூறினார். இதற்கு ஈரோடு மாவட்டம் பெருந்துறை தொகுதி அதிமுக எம்.எல்.ஏ தோப்பு வெங்கடாசலம் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார்.

விஜயமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்த வேண்டும். அந்த சுகாதார நிலையம் நல்ல நிலையில் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார். விஜபாஸ்கர் விளக்கம் திருப்தி இல்லை எனவும் தோப்பு வெங்கடாசலம் குறிப்பிட்டார். தோப்பு வெங்கடாசலம் பேச்சுக்கு எதிராக அதிமுக எம்.எல்.ஏக்கள் கூச்சல் எழுப்பினார்கள்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
First Session of the Tamil Nadu Legislative Assembly started on Jan 8. ADMK MLA N. D. Venkatachalam opposes ADMK Minister C. Vijayabaskar in assembly regarding Vijaymangalam Primary Health Center.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற