வேறு வழியில்லாமல் தான் பாஜக வேட்பாளரை அதிமுக ஆதரிக்கிறது- பொன்.ராதா ஓபன் டாக்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜனாதிபதி தேர்தலில் பாஜக வேட்பாளர் ராம்நாத் கோவிந்தை அதிமுக வேறுவழியின்றிதான் ஆதரிக்கிறது என மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

மத்திய இணை அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணனிடம், மோடியின் நிர்பந்தத்தின் காரணமாகத்தான் அதிமுக ஜனாதிபதி தேர்தலில் பாஜகவை ஆதரிக்கிறதா என்று கேட்டதற்கு, திமுக காங்கிரஸ் வேட்பாளர் மீரா குமாரை ஆதரிக்கும்போது, அதிமுக வேறுவழியின்றி பாஜக வேட்பாளரை ஆதரிக்கிறது. இதில் மோடியின் நிர்பந்தம் என்று கூறுவதற்கு ஒன்றும் இல்லை என கூறினார்.

Admk supports Bjp president candidate because there is no option told Pon.Radha krishnan

மேலும், தமிழகத்தில் அதிமுக ஆட்சி கவிழ வேண்டும் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தான் விரும்புகிறார். அதிமுக ஆட்சி நிலைப்பதும் கவிழ்வதும் அவர்கள் கையில்தான் உள்ளது. ஆனால், பாஜக அதிமுக ஆட்சி நிலைக்க வேண்டும் என விரும்புகிறது என கூறினார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Bjp wants that Admk should be in power but Dmk want Admk government should be dissolved said Pon. Radha krishnan
Please Wait while comments are loading...