For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நாடாளுமன்றத் தேர்தல்: அதிமுக 29, திமுக 5 இடங்கள்; காங்கிரஸ் தேறாதாம்- இந்தியா டுடே

By Mathi
|

சென்னை: லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் அதிமுக 29 இடங்களையும் திமுக 5 இடங்களையும் கைப்பற்றும் என்று இந்தியா டுடே- சிவோட்டர் கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லோக்சபா தேர்தலை தற்போது நடத்தினால் முடிவுகள் எப்படி இருக்கும் என 28 மாநிலங்களில் இந்தியா டுடே- சிவோட்டர் கருத்து கணிப்பு நடத்தியது. மொத்தம் 21,792 பேரிடம் கருத்து கணிப்பு நடத்தப்பட்டது.

தமிழகத்தில் அதிமுகவுக்குதான் அதிக இடங்கள் கிடைக்கும் என்கிறது இக்கருத்து கணிப்பு

29 இடங்கள் அதிமுகவுக்கு!

29 இடங்கள் அதிமுகவுக்கு!

கடந்த 2009ஆம் ஆண்டு தேர்தலில் 9 இடங்களைக் கைப்பற்றி இருந்த அதிமுக இம்முறை 29 தொகுதிகளைக் கைப்பற்றுமாம்.

கிங்மேக்கராகும் அதிமுக

கிங்மேக்கராகும் அதிமுக

அத்துடன் மாநில கட்சிகளிலேயே அதிமுகதான் அதிக தொகுதிகளைக் கைப்பற்றும் என்பதால் 'கிங் மேக்கராக'வும் அக்கட்சி உருவெடுக்குமாம்.

திமுக

திமுக

2009ஆம் ஆண்டு தேர்தலில் 18 இடங்களைக் கைப்பற்றிய திமுக இம்முறை 5 தொகுதிகளைத்தான் வெல்ல முடியும் என்கிறது கருத்து கணிப்பு.

காங்கிரஸ் தேறாதாம்.

காங்கிரஸ் தேறாதாம்.

தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு தொகுதி கூட கிடைக்கப்போவதில்லையாம். ப.சிதம்பரம் உட்பட போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்கள் தோல்வியை தழுவுவார்களாம்.

இதர கட்சிகளுக்கு தலா 1 இடம்

இதர கட்சிகளுக்கு தலா 1 இடம்

தமிழகத்தில் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், மதிமுக, தேமுதிக, விடுதலை சிறுத்தைகள் கட்சிகளுக்கு தலா ஒரு இடம் கிடைக்கும் என்கிறது இந்தியா டுடே கருத்து கணிப்பு.

பகுஜன் சமாஜ்க்கு 24

பகுஜன் சமாஜ்க்கு 24

மாநில கட்சிகளில் அதிமுகவுக்கு அடுத்த படியாக பகுஜன் சமாஜ் கட்சி 25 தொகுதிகளைக் கைப்பற்றுமாம்

திரிணாமுல் காங்கிரஸுக்கு 23, சமாஜ்வாடி-20

திரிணாமுல் காங்கிரஸுக்கு 23, சமாஜ்வாடி-20

மமதா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸுக்கு 23 தொகுதிகளும் அதற்கு அடுத்ததாக சமாஜ்வாடிக்கு 20 தொகுதிகள் வரை கிடைக்குமாம்.

விஸ்வரூப ஒய்.எஸ்.ஆர்., டி.ஆர்.எஸ்

விஸ்வரூப ஒய்.எஸ்.ஆர்., டி.ஆர்.எஸ்

ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் 13 தொகுதிகளையும் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி 13 தொகுதிகளையும் கைப்பற்றுமாம்

ஆம் ஆத்மிக்கு 10

ஆம் ஆத்மிக்கு 10

பிஜூ ஜனதா தளம் 14 இடங்களையும் ராஷ்டிரிய ஜனதா தளம் 11 இடங்களையும் கைப்பற்றும். ஆம் ஆத்மி கட்சிக்கு 10 தொகுதிகள் கிடைக்கும் என்கிறது இக்கணிப்பு.

ஐக்கிய ஜனதா தளத்துக்கும் பின்னடைவு

ஐக்கிய ஜனதா தளத்துக்கும் பின்னடைவு

கடந்த 2009ஆம் ஆண்டு தேர்தலில் 20 இடங்களைக் கைப்பற்றிய ஐக்கிய ஜனதா தளம் இம்முறை 4 தொகுதிகளைத்தான் பிடிக்குமாம். தெலுங்குதேசத்துக்கு 8 தொகுதிகள் கிடைக்குமாம்

இடதுசாரிகள்

இடதுசாரிகள்

இடதுசாரிகளைப் பொறுத்தவரையில் 31 தொகுதிகளளக் கைப்பற்றக்கூடும் என்கிறது இந்தியா டுடே கருத்து கணிப்பு.

English summary
The AIADMK is set to win most of the Lok Sabha seats in Tamil Nadu. The DMK however is likely to lose 13 seats and the Congress eight, according to the latest India Today Group-CVoter Mood of the Nation opinion poll.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X