அதிமுகவில் சண்டை போடக்கூடாது.. ஒற்றுமையாக இருக்கனும்... சொல்கிறார் சரத்குமார்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுகவில் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என சமத்துவமக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.

அதிமுகவில் ஏற்பட்டுள்ள மோதல் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. யாருக்கு ஆதரவு தெரிவிப்பது என கட்சியினர் குழம்பிப் போயுள்ளனர்.

இந்நிலையில் டிடிவி தினகரனை ஓரம்கட்டி கட்சியை பலப்படுத்தும் நடவடிக்கையில் இறங்கியுள்ளார் எடப்பாடி பழனிச்சாமி. ஓபிஎஸ் அணியை இணைக்கவும் எடப்பாடி பழனிச்சாமி நடவடிக்கை எடுத்து வருகிறார்.

 முதல்வருடன் சந்திப்பு

முதல்வருடன் சந்திப்பு

இந்நிலையில் சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை அவரது வீட்டில் நேரில் சந்தித்தார். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் சரத்குமார் பேசினார்.

 அணிகள் இணைய வேண்டும்

அணிகள் இணைய வேண்டும்

அதிமுக அணிகள் இணைய வேண்டும் என கோரிக்கை விடுத்தார். அதிமுக ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

 மீனவர்கள் கைதுக்கு கண்டனம்

மீனவர்கள் கைதுக்கு கண்டனம்

தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதற்கும் சரத்குமார் கண்டனம் தெரிவித்தார். மீனவர்கள் மீதான தாக்குதலை மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் அவர்

சரத்குமார், விஜய பாஸ்கர், ராதாகிருஷ்ணன் வீடுகளில் ஐடி ரெய்டு IT Raids in Sarathkumar, Radhakrishnan, Vijabaskar’s res
 யார் வேண்டுமானாலும் வரலாம்

யார் வேண்டுமானாலும் வரலாம்

மேலும் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் என்று கூறிய அவர், அரசியலுக்கு வர அனைவருக்கும் உரிமை இருக்கிறது என்றார். அதிமுகவில் குழப்பம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் சரத்குமாரின் முதல்வருடனான சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
SMK leader Sarathkumar said that ADMK teams should join. They should be unity he said.
Please Wait while comments are loading...