அதிமுக இணைப்பில் திடீர் முட்டுக்கட்டை.. சசிகலா குரூப் வெற்றிவேல் போர்க்கொடி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: 122 எம்எல்ஏ-க்களைக் கொண்ட எங்களுக்கு யாரிடமும் மண்டியிட வேண்டிய அவசியம் இல்லை என்று சசிகலா கோஷ்டியின் எம்எல்ஏ வெற்றிவேல் கூறியுள்ளார்.

சசிகலா குடும்பத்தினர் அதிமுகவில் இருக்கும் வரை பேச்சுவார்த்தைக்கே இடமில்லை என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இரு அணிகளும் இணைய நிபந்தனை இல்லை என தான் கூறியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாகவும் ஓ.பன்னீர்செல்வம் சென்னை விமான நிலையத்தில் தெரிவத்துள்ளார்.

இதுகுறித்து சசிகலா தரப்பு எம்எல்ஏ வெற்றிவேல் தெரிவிக்கையில், அதிமுகவின் இரு அணிகளும் இணைவது என்று ஓபிஎஸ் தெரிவித்த கருத்தை வரவேற்கிறேன். ஆனால் அதே வேளையில் அவர் இன்று காலை அளித்த பேட்டியின் மூலம் வேதாளம் முருங்கை மரம் ஏறியது தெரிகிறது.

ஏற்க மாட்டோம்

ஏற்க மாட்டோம்

ஜெயலலிதாவின் மரணம் குறித்து நீதி விசாரணை தேவை என்று ஓபிஎஸ் கூறுவதை எந்த தொண்டனும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். தினகரனை பதவி நீக்கம் செய்ய யாரு்ம எந்த அழுத்தமும் தரவில்லை. அமைச்சர்கள் சந்திப்புக் கூட்டம் நடத்தியதில் தவறு என்ன.

சண்டை இல்லை

சண்டை இல்லை

எங்களுக்குள் சண்டை இல்லை, கருத்து வேறுபாடுதான் உள்ளது. மாறி மாறி பேசும் இவர்களை நம்பி சென்றால் கட்சியை இழுத்து நடுத்தெருவில் நிறுத்திவிடுவார்கள். எங்களுக்கு யாரிடமும் மண்டியிட வேண்டிய அவசியம் இல்லை.

நாங்க எதுக்கு இறங்கி வர வேண்டும்

நாங்க எதுக்கு இறங்கி வர வேண்டும்

122 எம்எல்ஏ-க்கள் உள்ள நாங்கள் இறங்கி வரவேண்டுமா அல்லது வெறும் 11 எம்எல்ஏ-க்கள் கொண்ட அவர்கள் இறங்கி வரவேண்டுமா என்பதை நிருபர்களாகிய நீங்களே சொல்லுங்கள்.

சசிகலா இருப்பார்

சசிகலா இருப்பார்

அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாதான், துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்தான். இதில் எந்த மாற்றமும் இல்லை. அமைச்சர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் எந்த முடிவு எடுக்கப்பட்டது என்று எனக்கு தெரியாது. தூங்கிறவர்களை எழுப்பலாம், தூங்குவது போல் நடிப்பவர்களை எழுப்ப முடியாது என்றார் அவர்.

இதனால் இரு அணிகளும் இணையவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவே கருதப்படுகிறது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Vetrivel MLA from Sasikala team says they are not in a need to held talks because they 122 MLA's support. He also condemned O.Panneer selvam's comments over Sasikala.
Please Wait while comments are loading...