சிறு நீருக்கும் சிறுநீருக்கும் வித்தியாசம் தெரியாத எச் ராஜா.. மறுபடியும் சர்ச்சை!
சிறு நீர் மூழ்கிக்கும் சிறுநீர் மூழ்கிக்கும் என்ன தவறு என்பதை இன்னும் அறியாமல் இருக்கிறாரே இந்த எச் ராஜா.
Recommended Video

சென்னை: சிறு நீர் மூழ்கிக்கும் சிறுநீர் மூழ்கிக்கும் உள்ள வித்தியாசம் என்ன , தான் செய்த தவறு என்ன என்பதை இன்னும் அறியாமல் இருக்கிறாரே என்பதை நினைத்தால் பாவமாக இருக்கிறது.
சென்னைக்கு கடந்த புதன்கிழமை அன்று அமித்ஷா வந்திருந்தார். அப்போது அவர் மக்களவை தேர்தலுக்காக பாஜகவை வலுப்படுத்துவதற்காக ஆலோசனை நடத்தினார்.
அப்போது ஈஞ்சம்பாக்கத்தில் அமித்ஷா பேசினார். இந்தியில் பேசியதை பாஜக தேசிய செயலாளர் எச் ராஜா மொழிபெயர்த்தார். அதில் மைக்ரோ இரிகேஷன் எனப்படும் சொட்டு நீர் பாசனத்துக்கு குறிப்பிட்ட தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டதாக தெரிவித்தார்.

கேலி செய்தல்
இதை எச் ராஜா மொழிபெயர்த்த போது மைக்ரோ இரிகேஷனை சிறுநீர் பாசனம் என்று கூறிவிட்டார். வெறும் வாய்க்கு அவல் கிடைத்தது போல் எச் ராஜாவுக்கு காத்திருந்த நெட்டிசன்கள் அவரை கடுமையாக கேலி செய்து விட்டனர்.

தவறுதலாக
மைக்ரோ என்றால் சிறிய, நுண், நுண்ணிய போன்ற வார்த்தைகளை எச் ராஜா பயன்படுத்திருக்கலாம். ஆனால் அவரோ சிறுநீர் பாசனம் என்று பயன்படுத்திவிட்டார். ஏதோ தவறுதலாக செய்துவிட்டதாக கூறியிருந்தாலும் பரவாயில்லை.

தாய்லாந்து விவகாரம்
செய்த தவறை நியாயப்படுத்தும் நோக்கில் தான் கூறியது சரிதான் என்றே தவறுதலாகவே எழுதுகிறார். சிறு நீர் பாசனம் என்பதற்கு பதிலாக சிறுநீர் பாசனம் என்றே எழுதுகிறார். தான் செய்த தவறை நியாயப்படுத்த தாய்லாந்து விவகாரத்தை கையிலெடுத்துள்ளார்.

நியாயப்படுத்தி டுவீட்
சிறு நீர்மூழ்கியுடன் வந்தார் அமெரிக்கா தொழிலதிபர் என்ற தலைப்பில் ஒரு செய்தித்தாளில் செய்தி வெளியானது. அந்த கட்டிங்ஸ்ஸை டுவிட்டரில் இணைத்துள்ளார். அதன் மேல் சில கமென்ட்டுகளை கொடுத்துள்ளார். அதில் இன்று தினகரன் பத்திரிகையில் 14 ம் பக்கத்தில் ஒரு செய்தி வந்துள்ளது. 200/- ரூபாய்க்கு மீம்ஸ் போடும் கும்பல் சிறுநீர் மூழ்கியுடன் வந்தார் அமெரிக்க தொழிலதிபர் என்று கூச்சல் போடும் பாருங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
|
ராஜா "திருந்த" வேண்டும்
செய்தித்தாளில் வெளியான சிறு நீர்மூழ்கி என்பது சரியே. ஆனாலும் ராஜா எழுதும் போது சிறுநீர் என்றே சேர்த்து எழுதுகிறார். அதாவது அவரது தவறு என்ன என்று இன்னும் அவருக்கு விளங்கவில்லை என்று தெரிகிறது. இந்த பதிவை போட்டது அட்மினாக இருந்தால் அவர் மீது ராஜா நடவடிக்கை எடுத்து தனக்கு ஏற்பட்ட களங்கத்தை துடைத்துக் கொள்ள வேண்டும் அல்லது அவரே போட்டிருந்தால் சிறு நீர் என்று பிரித்து எழுத முயற்சிக்க வேண்டும்.
-
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications