தினகரனின் ஸ்லீப்பர் செல்லாக தீவிரமாக செயல்பட்டதால் பேராசிரியர் தீரன் டிஸ்மிஸ்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ டிடிவி தினகரனின் ஸ்லீப்பர் செல்லாக செயல்பட்டதால் பேராசிரியர் தீரன் அதிமுகவில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளார்.

பாமகவில் இருந்த தீரன் கட்சிகள் மாறிக் கொண்டே வந்தார். தனிக்கட்சி தொடங்கினார். பின்னர் நாம் தமிழர் கட்சிக்கு போனார்.

அங்கிருந்து பண்ருட்டி வேல்முருகனின் தமிழக வாழ்வுரிமைக் கட்சிக்கு தாவினார். அதில் இருந்து விலகி அதிமுகவுக்கு தாவி டிவி விவாதங்களில் பங்கேற்று வந்தார்.

டிவி விவாத குழு

டிவி விவாத குழு

அதிமுக அணிகள் உடைந்த நிலையில் சசிகலா அணியிலேயே இருந்தார். தினகரன் தனியாகப் போன போதும் கூட முதல்வர் எடப்பாடியார் அணியில் இருந்தார். அவரும் டிவி விவாதங்களில் பங்கேற்பவர்களில் ஒருவராக நியமிக்கப்பட்டும் இருந்தார்.,

எரிச்சலில் அதிமுக

எரிச்சலில் அதிமுக

ஆனால் டிவி விவாதங்களில் பேசும்போது, தினகரன் இன்னமும் அதிமுகவின் ஒரு அங்கம் என்பதைப் போலவும் சசிகலா தொடர்பாக மென்மையாகவே கருத்துகளையும் வைத்து வந்தார். இது முதல்வர் எடப்பாடியார் உள்ளிட்டோரை கடும் அதிர்ச்சியடைய வைத்தது.

திரும்பியே வர முடியாது என எச்சரிக்கை

திரும்பியே வர முடியாது என எச்சரிக்கை

இதனால் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பேராசிரியர் தீரனை அழைத்த மேற்கு மாவட்ட அமைச்சர்கள் செம டோஸ் விட்டிருந்தனர். அதிமுக பக்கமே இனி எட்டிப்பார்க்க முடியாத நிலைதான் வரும் எனவும் கூறியிருந்தனர்.

ஸ்லீப்பர் செல்

ஸ்லீப்பர் செல்

இந்நிலையில் தீரன் தற்போது அதிமுகவில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளார். தினகரனின் ஸ்லீப்பர் செல்லாக தீவிரமாக செயல்பட்டதால் தற்போது தீரன் அதிமுகவை விட்டு நீக்கப்பட்டுவிட்டார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
AIADMK today expelled Prof Dheeran from the party who is acting as sleepe cell of Dinakaran.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

X