வெள்ள மீட்பு பணிகள்.. அவசர உதவி எண்கள் அறிவித்த அதிமுக ஐடி விங்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் நிலவும் மழை வெள்ள பாதிப்பிலிருந்து மக்களுக்கு உதவிகள் செய்ய அதிமுகவின் ஐடி விங்க் தன்னார்வலர்களும் களமிறங்கியுள்ளனர்.

சென்னை மட்டுமல்லாது திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், நாகை, நெல்லை உட்பட பல்வேறு மாவட்டங்களிலும் கடந்த சில நாட்களாக கன மழை பெய்துள்ளது. இதனால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளில் இருந்து மக்களுக்கு உதவி செய்ய தன்னார்வலர்களை களமிறக்கியுள்ளது அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் சிங்கை ஜி. ராமச்சந்திரன் இதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளார்.

AIADMK IT wing doing flood relief

இதுதொடர்பாக டிவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், தன்னார்வலர்களின் தொலைபேசி எண்கள் பகிரப்பட்டுள்ளது.

மேலும், @AIADMKITWINGOFL என்ற டிவிட்டர் தளத்தை டேக் செய்து, டிவிட்டர் வாயிலாகவும் புகார்களை தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆளும் கட்சியின் பிரமுகர்கள் என்பதால் அரசிடமிருந்தும், அரசுத்துறைகளிடமிருந்தும் துரிதமாக உதவிகள் பெற்றுத்தர அதிமுக தன்னார்வலர்களுக்கு வசதியாக உள்ளது சிறப்பு.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
AIADMK IT wing have created a Twitter account for rain related updates and to address the issues.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற