ஜெ. பட விவகாரம்.. அதிமுகவின் ஸ்லீப்பர் செல்தான் என கன்பார்ம் செய்த விஜயதாரணி- கொதிப்பில் காங்.!

Posted By:
Subscribe to Oneindia Tamil
  அதிமுகவின் ஸ்லீப்பர் செல்தான் என கன்பார்ம் செய்த விஜயதாரணி- வீடியோ

  சென்னை: ஜெயலலிதா படத்தை சட்டசபையில் திறக்க தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். ஆனால் காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதாரணியோ ஜெயலலிதா படத்தை திறந்து வைத்ததற்காக முதல்வர் எடப்பாடியாருக்கு நன்றி தெரிவித்து அதிமுகவின் ஸ்லீப்பர் செல் என உறுதி செய்திருக்கிறார் என கொந்தளிக்கின்றன கதர் சட்டை வட்டாரங்கள்.

  சொத்து குவிப்பு வழக்கின் குற்றவாளி ஜெயலலிதா படத்தை சட்டசபையில் திறக்கக் கூடாது என்பது எதிர்க்கட்சிகள் நிலைப்பாடு. இதனால் இன்று சட்டசபையில் ஜெயலலிதா படத் திறப்பு நிகழ்ச்சியை திமுக, காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் புறக்கணித்தனர்.

  விஜயதாரணி ஆதரவு

  விஜயதாரணி ஆதரவு

  ஜெயலலிதா படத்தை அகற்றக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தையும் நாடியுள்ளது திமுக. இதனிடையே ஜெயலலிதா படத் திறப்புக்கு நேற்றே ஆதரவு தெரிவித்திருந்தார் காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதாரணி.

  திருநாவுக்கரசர் கண்டனம்

  திருநாவுக்கரசர் கண்டனம்

  ஆனால் விஜயதாரணியின் கருத்தை நிராகரிக்கும் வகையில் திருநாவுக்கரசர், ஜெயலலிதா படத் திறப்பை கடுமையாக கண்டித்திருந்தார். அத்துடன் காங்கிரஸும் இந்த நிகழ்ச்சியை புறக்கணிக்கும் எனவும் அறிவித்திருந்தார்.

  விஜயதாரணி வாழ்த்து

  விஜயதாரணி வாழ்த்து

  இன்று சட்டசபை நிகழ்ச்சிக்கும் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் போகவில்லை. ஆனால் படத் திறப்பு நிகழ்ச்சி முடிந்த உடனேயே முதல் ஆளாய் முதல்வர் எடப்பாடியார், சபாநாயகர் தனபால் ஆகியோரை சந்தித்து, ஜெயலலிதா படத் திறப்புக்கு நன்றி தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

  நடவடிக்கை எடுக்க கோரிக்கை

  நடவடிக்கை எடுக்க கோரிக்கை

  அதிமுகவுக்கு ஆதரவாக தொடர்ந்து செயல்படும் விஜயதாரணி, நாளை நம்பிக்கை வாக்கெடுப்பை எடப்பாடி அரசு கோரினால் ஆதரவு தர வாய்ப்புள்ளது என்பது காங்கிரஸ் தொண்டர்களின் குற்றச்சாட்டு. அதிமுகவின் ஸ்லீப்பர் செல்லாக செயல்படும் விஜயதாரணி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் எதிர்கோஷ்டியினர் வலியுறுத்தி வருகின்றனர்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Congress MLA Vijayadharani today ment CM Edappadi Palanisamy and Speaker Dhanapal.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற