For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சர்ருன்னு குறைந்த ஆதரவாளர்கள் கூட்டம்.. சும்மா ஜிவ்வுன்னு கோபமான அழகிரி.. நிருபர்களை விரட்டினார்!

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

Recommended Video

    குறைந்த ஆதரவாளர்கள் கூட்டம்... கோபத்தில் நிருபர்களை விரட்டிய அழகிரி

    சென்னை: அழகிரியின் வீட்டுக்கு குறைந்த அளவிலான ஆதரவாளர்கள் வந்ததால் கடுப்பான அழகிரி அங்கு வந்த செய்தியாளர்களை விரட்டினார்.

    தனது ஆதரவாளர்களுக்கு முக்கிய பதவிகளை கொடுப்பதில்லை என்ற பிரச்சினை அழகிரி எழுப்பியதால் அவரை கட்சியிலிருந்து கடந்த 2014-ஆம் ஆண்டு கருணாநிதி திமுகவில் இருந்து நீக்கினார்.

    இதையடுத்து கட்சியில் இணைவதற்கு எந்த முனைப்பையும் அழகிரி காட்டவில்லை. இந்நிலையில் திமுக தலைவராக இருந்த கருணாநிதி கடந்த 7-ஆம் தேதி காலமானார். இதையடுத்து அவரது சமாதிக்கு அஞ்சலி செலுத்த சென்ற அழகிரி தனது ஆதங்கத்தை அப்பாவிடம் கொட்டித் தீர்க்க வந்தேன் என்றார்.

    பலத்தை நிரூபிப்பேன்

    பலத்தை நிரூபிப்பேன்

    மேலும் திமுகவில் தான் இணைவது ஸ்டாலினுக்கு பிடிக்கவில்லை என்றும் வரும் செப்டம்பர் 5-ஆம் தேதி பேரணியாக சென்று கருணாநிதிக்கு மரியாதை செலுத்துவேன் என்றும் அறிவித்திருந்தார். அச்சமயம் தனக்கு தனது பலத்தை நிரூபிப்பேன் என்றும் கூறியிருந்தார்.

    பின்விளைவுகள்

    பின்விளைவுகள்

    இதைத் தொடர்ந்து அழகிரி மற்றொரு நாள் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் திமுகவை காப்பாற்றும் எண்ணத்தில் உள்ளேன். மற்றபடி பதவியை நான் விரும்பவில்லை. தன்னை திமுகவில் சேர்த்துக் கொள்ளாவிட்டால் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும்.

    ஆலோசனை

    ஆலோசனை

    திமுக தொண்டர்கள்தான் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தும் பேரணிக்கு என்னை தலைமை வகிக்குமாறு அழைத்துள்ளனர் என்றும் தெரிவித்தார். இந்த பேரணியின் போது ஸ்டாலின் அணிக்கு தனது பலத்தை நிரூபிப்பேன் என்று சவால் விடுத்திருந்த நிலையில் கடந்த 24-ஆம் தேதி முதல் அவரது வீட்டில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வந்தார்.

    கோபமான அழகிரி

    கோபமான அழகிரி

    திமுக தலைவராக ஸ்டாலின் பதவியேற்ற நிலையில் இன்று அழகிரியின் வீட்டுக்கு வெறும் 10 முதல் 15 பேர் வரை மட்டுமே வந்தனர். இதனால் அழகிரி கடும் கோபத்தில் இருந்தார். அப்போது அங்கு பத்திரிகையாளர்கள் வந்ததால் மேலும் கோபமான அழகிரி அவர்களை விரட்டினார்.

    English summary
    On Wednesday, there were over 10 supporters who were at Alagiri's residence to meet him. So he asked media persons to leave his residence.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X