For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஆர்.நல்லக்கண்ணுவிற்கு அம்பேத்கர் சுடர் விருது: நாளை திருமா வழங்குகிறார்!

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ‘அம்பேத்கர் சுடர்' விருது இந்திய கம்யூனிஸ்டு மூத்த தலைவர் ஆர்.நல்லக்கண்ணுவிற்கும், காமராஜர் விருது காங்கிரஸ் பிரமுகர் கோபண்ணாவிற்கும் நாளை வழங்கப்படுகிறது.

அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் விருது வழங்கும் விழா நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டு லோக்சபா தேர்தல் நடைப்பெற்றதால் விருது வழங்கும் விழா ஒத்தி வைக்கப்பட்டது.

நான்கு விழாக்கள்

நான்கு விழாக்கள்

நாளை (ஞாயிற்றுக்கிழமை) சென்னை வேப்பேரி பெரியார் திடலில் மாலை 4 மணிக்கு அம்பேத்கர் பிறந்த நாள் விழா, விடுதலை சிறுத்தைகளின் விருது வழங்கும் விழா மற்றும் அயோத்திதாசர் நூற்றாண்டு விழா மற்றும் அயோத்திதாசர் நூற்றாண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி ஆகியவை நடைபெறுகிறது.

நல்லக்கண்ணுவிற்கு விருது

நல்லக்கண்ணுவிற்கு விருது

‘அம்பேத்கர் சுடர்' விருது இந்திய கம்யூனிஸ்டு மூத்த தலைவர் ஆர்.நல்லக்கண்ணுவிற்கும், காமராஜர் விருது காங்கிரஸ் பிரமுகர் கோபண்ணாவிற்கும் வழங்கப்படுகிறது.

பெரியார் விருது

பெரியார் விருது

பெரியார் விருது மறைந்த திருவாரூர் தங்கராசுக்கும் ‘காயிதே மில்லத் விருது மார்க்ஸ் என்பவருக்கும் அயோத்தி தாசர் விருது மறைந்த கமலநாதனுக்கும்' செம்மொழி ஞாயிறு விருது மணவை முஸ்தபாவிற்கும் வழங்கி கவுரவிக்கப்படுகிறது.

விருது பணமுடிப்பு

விருது பணமுடிப்பு

விழாவிற்கு தொல்.திருமாவளவன் தலைமை தாங்கி விருது மற்றும் பண முடிப்புகளை வழங்குகிறார். நிகழ்ச்சியில் பொதுச் செயலாளர் ரவிக்குமார் நிர்வாகிகள் சிந்தனை செல்வன், முகமது யூசூப், உஞ்சை அரசன், பாலரசு, எஸ்.எஸ்.பாலாஜி மற்றும் மாநில பொறுப்பாளர்கள் மாவட்ட செயலாளர்கள் கலந்து கொள்கிறார்கள்.

English summary
VCK chief Thol.Thirumavalavan has announced that senior Communist Party of India leader R. Nallakannu has been chosen for the Ambedkar Sudar award.VCK is giving awards every year ahead of Dr. Ambedkar's birthday. This year's award function will be held on June 15.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X