பெட்ரோல் விலை பற்றி தமிழிசையிடம் கேட்ட ஆட்டோ டிரைவர்.. தாக்கிய பாஜகவினர்.. சிரிப்பை பாருங்க!
தமிழ்நாடு மாநில பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜனிடம் பெட்ரோல் விலை குறித்து கேள்வி எழுப்பிய ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் பாஜகவினரால் தாக்கப்பட்டு இருக்கிறார்.
Recommended Video

சென்னை: தமிழ்நாடு மாநில தலைவர் பாஜக தமிழிசை சௌந்தரராஜனிடம் பெட்ரோல் விலை குறித்து கேள்வி எழுப்பிய ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் பாஜகவினரால் தாக்கப்பட்டு இருக்கிறார்.
பட்டப்பகலில் செய்தியாளர் சந்திப்பில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இது அப்படியே வீடியோவாக வெளியாகி உள்ளது.
கடந்த இரண்டு வாரம் முன் தமிழ்நாடு மாநில பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், சோபியா மூலம் சர்ச்சையில் சிக்கினார். அந்த வழக்கே இன்னும் முடியவில்லை. நேற்று எச்.ராஜா வீடியோ வெளியாகி வைரலானது. தற்போது பாஜகவிற்கு அடுத்த பிரச்சனை உருவாகி உள்ளது.

ஆட்டோ ஓட்டுநர்
தற்போது புதிய சர்ச்சையில் சிக்கி உள்ளார் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன். அவர் செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் பேசிக்கொண்டு இருக்கும் சமயத்தில் பெட்ரோல் விலை ஏற்றம் குறித்து கேள்வி கேட்ட ஆட்டோ ஓட்டுநர் அப்புறப்படுத்தப்பட்டுள்ளார். தமிழிசை சௌந்தரராஜனின் ஆதரவாளர்களால் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தப்பட்டுள்ளார்.
|
வீடியோ வைரல்
இந்த சம்பவம் அப்படியே வீடியோவாக வெளியாகி உள்ளது. தமிழிசை சௌந்தரராஜன் பேசிக்கொண்டு இருக்கும் போதே, அந்த ஆட்டோ ஓட்டுநர் பெட்ரோல் விலை உயர்வு குறித்து கேட்கிறார். உடனே தமிழிசை சௌந்தரராஜனின் ஆதரவாளர்கள் அந்த டிரைவரை வலுக்கட்டாயமாக கழுத்தை பிடித்து இழுத்து வெளியே அனுப்புகிறார்கள். இது பார்க்கவே அதிர்ச்சி அளிக்க கூடிய வகையில் உள்ளது.
|
சிரித்தார்
இதில் இன்னும் கஷ்டமான விஷயம் என்னவென்றால், இந்த சம்பவம் நடக்கும் போதே, தமிழிசை சௌந்தரராஜன் சிரித்துக் கொண்டு இருக்கிறார். அவர் கழுத்தை பிடித்து தள்ளிய போது தமிழிசை சௌந்தரராஜன் சிரிப்பதும் இதில் பதிவாகி உள்ளது.

தாக்கினார்கள்
அதோடு, பாஜக தொண்டர்களால் அந்த ஓட்டுநர் தாக்கப்பட்டு இருக்கிறார். இதற்கு பின் தனியார் ஆங்கில தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்த அந்த ஓட்டுநர், தன்னை பாஜக தொண்டர்கள் மோசமாக தாக்கியதாக கூறியுள்ளார்.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
பாமக போட்டியிடும் 18 தொகுதிகள் எவை? வெளியானது உத்தேச பட்டியல்.. எல்லாமே வட மாவட்டங்களில்? -
தேர்தலில் போட்டியில்லை.. டெல்லிக்கு கடிதம் எழுதிய அண்ணாமலை.. பாஜகவில் டிவிஸ்ட் -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி..40 கேட்ட பாஜகவுக்கு 27! ஒரே நாளில் முடிந்த டீலிங்..கெத்து அதிமுக! -
சென்னையில் 16 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் 13 தொகுதிகள் விவரம்.. 3ல் கூட்டணி கட்சிகள் போட்டி -
பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் இவை தானா? கொங்கு & தென் மண்டலம் டார்கெட்! -
அவிநாசி அல்லது மேட்டுப்பாளையம்.. 2ல் ஒரு தொகுதியில் போட்டியிடும் மத்திய இணையமைச்சர் எல்.முருகன்? -
நடிகை கவுதமியை மீண்டும் ஏமாற்றிய அதிமுக – பாஜக.. ராஜபாளையம் ஜான் பாண்டியனுக்கு ஒதுக்கியதன் பின்னணி -
திமுகவையே ஓவர்டேக் செய்த எடப்பாடி.. அதிமுக – பாஜக தொகுதி பங்கீட்டில் இப்படி நடந்ததே இல்லை! பின்னணி -
மதுரை வடக்கில் சரவணனுக்கு சீட் இல்லையா? தாமரை சின்னத்தில் களமிறங்கும் திருமாறன்.. பின்னணியில் மூவர்! -
"அந்த" 54 தொகுதிகள் தான் மேஜிக்.. மம்தாவை காலி செய்ய சக்கர வியூகம்.. இறங்கி அடிக்கும் பாஜக! -
Election Commission: தேர்தல் ஆணைய கடிதத்தில் பாஜகவின் முத்திரை.. கேரள அரசியல் கட்சிகள் அதிர்ச்சி.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications