சத்யராஜுக்கு எதிராக கர்நாடகத்தில் முழு கடையடைப்பு.. அன்புமணி கடும் கண்டனம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கர்நாடகாவில் நடிகர் சத்யராஜுக்கு எதிரான நடக்க இருக்கும் போராட்டத்தை அனுமதிக்கக் கூடாது என பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

கன்னட மக்களைத் தவறாகப் பேசியதாகக் கூறி நடிகர் சத்யராஜுக்கு கண்டனம் தெரிவித்துள்ள கன்னட சலுவளிக் கட்சித் தலைவர் வட்டாள் நாகராஜ், வரும் ஏப்ரல் 28-ம் தேதி பெங்களூரில் முழு அடைப்பு நடத்தப் போவதாக அறிவித்துள்ளார்.

Anbumani condemns Bandh against Actor Sathyaraj

சத்யராஜ் பேசியுள்ளது கன்னட மக்களைப் புண்படுத்தியுள்ளது. எனவே அவர் பகிரங்கமாக, நிபந்தனையற்ற மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும் சத்யராஜை எதிர்த்து ஏப்ரல் 28-ம் தேதி பெங்களூருவில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்றும் கன்னட அமைப்பினர் அறிவித்துள்ளனர்.

கன்னட அமைப்பினரின் இந்தப் போராட்டத்திற்கு பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், கன்னட அமைப்புகள் கடையடைப்பு செய்வதையும் அதனையொட்டி வன்முறை உருவாவதையும் அம்மாநில அரசு தடுக்காமல் இருப்பது வருத்தமளிக்கிறது என்றும் அன்புமணி தெரிவித்துள்ளார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
PMK leader Anbumani has condemned Bandh will be held against Actor Sathyaraj in Karnataka on April 28.
Please Wait while comments are loading...