நீட் தேர்வு சமூக நீதிக்கு எதிரானது...சிபிஎஸ்இ மாணவர்களுக்கே அதிக பயன்: அன்புமணி ராமதாஸ் கொந்தளிப்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil

கோவை : நீட் தேர்வால் சிபிஎஸ்இ மாணவர்களுக்கே அதிக பயன் இருக்கும் என்றும் இது சமூக நீதிக்கு எதிரானது என்றும் பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது :

எந்தத் துறையாக இருந்தாலும் அது குறித்து சம்பந்தப்பட்டவர்களுடன் பொது மேடையில் விவாதிக்க நான் தயாராக இருக்கிறேன். மு.க.ஸ்டாலினை நான் தான் விவாதத்திற்கு அழைத்தேன், ஆனால் அமைச்சர் செங்கோட்டையன் அவரே என்னை விவாதத்திற்கு அழைத்தார்.

 Anbumani ramadoss says NEET is against of Social justice

அதனை ஏற்று தான் பொதுவிவாதத்திற்கு ஏற்பாடு செய்தோம், ஆனால் அவர் விவாதத்தில் பங்கேற்கவில்லை.

நீட் தேர்வு அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை என்பது சமூக நீதிக்கு எதிரானது. இந்த முறையில் மாணவர் சேர்க்கை நடைபெற்றால் 98 சதவீத இடங்கள் சிபிஎஸ்இ மாணவர்களுக்கே கிடைக்கும் நிலை உள்ளது.

அதிமுகவின் 3 அணிகளுமே கூட்டுக் கொள்ளையர்கள் தான். அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தால் 3 மாவட்டங்கள் பயனடையும், தமிழக அரசு திவாலாகிவிட்டது, இனி அதனால் நல்லது நடக்கும் என்று எதிர்பார்க்க முடியாது.

இவ்வாறு அன்புமணி ராமதாஸ் கூறினார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
PMK youth wing leader Anbumani ramadoss says on the basis of NEET in medical admissions would benefit CBSE students only which is against of social justice.
Please Wait while comments are loading...