ஆந்திராவில் ஆட்டோ மீது லாரி மோதியதில் 6 பெண்கள் பலி- வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: ஆந்திரா மாநிலத்தில் கோதாவரி மாவட்டத்தில் ஷேர் ஆட்டோவில் கோயிலுக்கு சென்று கொண்டிருந்த பெண்கள் மீது லாரி மோதியதில் 6 பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டனர்.

கோதாவரி மாவட்டத்தில் ஆலாவரம் கிராமத்திலிருந்து 11 பெண்கள் ஷேர் ஆட்டோவில் வடபள்ளியில் உள்ள பெருமாள் கோயிலுக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது பொலக்கோட்டைவாரிபள்ளி அருகே சென்ற போது எதிரே வேகமாக வந்த லாரி ஆட்டோ மீது மோதியது.

 Andhra: Share Auto met with an accident- 6 were died

இதில் சம்பவ இடத்திலேயே 6 பெண்கள் உயிரிழந்தனர். மீதமுள்ள 5 பேர் பலத்த காயமடைந்தனர். தகவலறிந்த போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சடலங்களை மீ்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்தால் அப்பகுதியில் 2 மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
A group of passengers who travelled in Share auto was hit by lorry and 6 were died in the spot in Andhra pradesh.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற