2ஜி தீர்ப்பு தேதி நாளை வெளியாகும் நிலையில் கருணாநிதியுடன் மோடி சந்திப்பால் பரபரப்பு!

Posted By:
Subscribe to Oneindia Tamil
2ஜி தீர்ப்பு தேதி நாளை வெளியாகும் நிலையில் கருணாநிதியுடன் மோடி சந்திப்பால் பரபரப்பு!- வீடியோ

சென்னை : 2ஜி வழக்கு விசாரணையில் தீர்ப்பு தேதி நாளை வெளியாக உள்ள நிலையில் சென்னையில் இன்று பிரதமர் நரேந்திர மோடி திமுக தலைவர் கருணாநிதியை சந்திந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுகவினருக்கு ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு எப்படி கழுத்திற்கு மேல் கத்தியாக தொங்கியதோ அதே போன்று திமுகவினரின் கழுத்திற்கு மேல் தொங்கும் கத்தி 2ஜி வழக்கின் தீர்ப்பு

மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைமையிலான அரசு 2004-2009 மற்றும் 2009 முதல் 2014-ஆம் ஆண்டுகள் வரை ஆட்சியில் இருந்தது. அதில் முதலாவது ஆட்சியில் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக புகார்கள் எழுந்தன.

திமுக எதிர்காலத்தை தீர்மானிக்கும் தீர்ப்பு

திமுக எதிர்காலத்தை தீர்மானிக்கும் தீர்ப்பு

இது தொடர்பாக உச்ச நீதிமன்ற உத்தரவின்பேரில் சிபிஐ விசாரணை நடத்தியது. அதில் மத்திய தொலைதொடர்புத்துறை அமைச்சராக ஆ. ராசா, மாநிலங்களவை திமுக உறுப்பினர் கனிமொழி உள்ளிட்ட 14 பேர் மீதும் மூன்று தனியார் நிறுவனங்கள் மீதும் சிபிஐ 2011-ஆம் ஆண்டில் வழக்கு பதிவு செய்தது.

இரண்டு முறை தீர்ப்பு தேதி ஒத்திவைப்பு

இரண்டு முறை தீர்ப்பு தேதி ஒத்திவைப்பு

இந்த வழக்கில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டு, குற்றம்சாட்டப்பட்டுள்ள முன்னாள் மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஆ. ராசா, மாநிலங்களவை திமுக உறுப்பினர் கனிமொழி உள்ளிட்டோ் மற்றும் சில தனியார் நிறுவனங்களின் தரப்பு வாதங்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிறைவடைந்தன. இதைத்தொடர்ந்து, வழக்கு தொடர்புடைய ஆவணங்கள் ஆயிரகணக்கான பக்கங்களுக்கு இருந்ததால் அவற்றைப் படித்துப் பார்த்த பிறகு தீர்ப்பை எழுதும் பணியில் ஈடுபடுவதாக டெல்லி சிபிஐ நீதிமன்ற சிறப்பு நீதிபதி ஓ.பி.சைனி கடந்த ஆகஸ்ட் மாதம் கூறியிருந்தார். இதன் பின்னர் இந்த வழக்கு இரு முறை விசாரணைக்கு வந்தபோதும், தீர்ப்பு தேதியை சிறப்பு நீதிபதி சைனி அறிவிக்கவில்லை.

 திடீர் சந்திப்பு 2ஜி

திடீர் சந்திப்பு 2ஜி

அலைக்கற்றை வழக்கு தொடர்பான தீர்ப்பு தேதி நாளை வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தினத்தந்தி பவளவிழா கொண்டாட்டத்தில் பங்கேற்க சென்னை வந்த பிரதமர் நரேந்திர மோடி இன்று பிற்பகலில் கோபாலபுரம் வந்தார். அந்த சந்திப்பின் போது திமுக தலைவர் கருணாநிதியை அவர் சந்தித்தார்.

 கருணாநிதியிடம் நலம் விசாரித்த மோடி

கருணாநிதியிடம் நலம் விசாரித்த மோடி

கருணாநிதியின் உடல்நிலை குறித்து இந்த சந்திப்பின் போது அவர் நலம் விசாரித்தார். 2ஜி வழக்கு தீர்ப்பு தேதி வெளியாகும் நிலையில் கருணாநிதி, பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
2g specctrum case judgement is in final stage by the arrangement of Karunanidhi family, Modi is visiting DMK chief Karunanidhi at his Gopalapuram residence today.
Please Wait while comments are loading...