அமைச்சர் விஜயபாஸ்கர் சொத்துக்கள் முடக்கம்... அடுத்து என்ன? - வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

புதுக்கோட்டை: சுகாதாரத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கரின் சொத்துக்களை வருமான வரித்துறையினர் முடக்கியுள்ளனர்.

தமிழக சுகதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வீடு மற்றும் அலுவலகங்களில் கடந்த ஏப்ரல் மாதம் வருமானவரித் துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

Minister Vijayabaskar's assets are freezing-Oneindia Tamil

அதனையடுத்து அங்கு கிடைத்த முக்கிய ஆவணங்களின் அடிப்படையில் அவரது அப்பா, சகோதரர் மற்றும் மனைவி ஆகியோர் வருமான வரித்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகினர்.

இந்நிலையில், அமைச்சர் விஜயபாஸ்கரும் பலமுறை வருமானவரித் துறை அலுவலகத்தில் ஆஜராகி பதில் அளித்தார். அதேகாலகட்டத்தில் அமைச்சர் மீது தடை செய்யப்பட்ட போதைப் பொருள் குட்காவை விற்க லஞ்சம் வாங்கியதாக பரபரப்பான குற்றச்சாட்டு எழுந்தது.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மீண்டும் வருமான வரித்துறை அலுவலகத்தில் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் விசாரனைக்கு ஆஜரானார்.

அதனையடுத்து புதுக்கோட்டையில் உள்ள திருவேங்கை வாசலில் விஜயபாஸ்கருக்கு சொந்தமான குவாரிகள் மற்றும் 100 ஏக்கர் நிலம் முடக்கப்பட்டுள்ளது. இதனால் அமைச்சர் தரப்பு அதிர்ச்சியடைந்து உள்ளது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Assets of health minister C. Vijayabhaskar was seized by IT department. And sources told it may extend and many of his assets may be be seized.
Please Wait while comments are loading...