தஞ்சையில் அரசு பேருந்து - மினி லாரி நேருக்கு நேர் மோதி விபத்து: 6 பெண்கள் உள்பட 9 பேர் பலி

Posted By:
Subscribe to Oneindia Tamil

தஞ்சாவூர்: தஞ்சாவூர் ஆலங்குடி - வல்லம் பிரிவு அருகே அரசுப் பேருந்தும் மினி லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 6 பெண்கள் உள்பட 9 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

திருப்பூரில் இருந்து கும்பகோணம் சென்ற அரசு பேருந்தும், தஞ்சாவூரில் இருந்து திருச்சி நோக்கி வந்துகொண்டிருந்த மினி லாரியும் ஆலங்குடி - வல்லம் பிரிவு அருகே நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக்கொண்டன. இந்த கோர விபத்தில் அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் மினிலாரி ஓட்டுநர்  பலியாயினர்.

At least 7 people were killed accident in Thanjavu

3 பெண்கள், 6 ஆண்கள் உள்பட 9 பேர் பலியாகியுள்ளனர். மேலும் காயமடைந்த 19 போ் தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனையிலும் 5 போ் மீனாட்சி மிஷன் மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
At least 9 people were killed and 20 others injured when a mini lorry collided with a bus in Thanjavur District.
Please Wait while comments are loading...