தேனி.. ஆட்டோவில் பயணிகளை ஏற்றுவதில் மோதல்... பெட்ரோல் குண்டு வீச்சு! - வீடியோ
தேனி: தேனியில் ஆட்டோவில் பயணிகளை ஏற்றுவதில் இருதரப்பினருக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலில் ஒரு தரப்பினர் பெட்ரோல் குண்டுகளை வீசியதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
தேனியில் அருகில் இருக்கும் ஊர்களுக்கு பேருந்து வசதி இல்லாத காரணத்தால், ஷேர் ஆட்டோக்கள் மூலம் தான் அதிக அளவில் போக்குவரத்து நடைபெறுகிற்தது. இதனால் அங்கு, நிறைய ஷேர் ஆட்டோக்கள் இயக்கப்படுகின்றன.

அந்த ஷேர் ஆட்டோக்களில் ஒவ்வொரு முறையும் அதிக எண்ணிக்கையிலான பயணிகளை ஏற்றுவதில் இருதரப்பு ஆட்டோ ஓட்டுநர்களிடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
இருதரப்பினருக்கும் மோதம் முற்றியதில் அதில் ஒரு தரப்பினர், பெட்ரோல் குண்டுகளை வீசியுள்ளனர். இதனால் அங்கு இருந்த கார்களின் கண்ணாடிகள் உடைந்து பாதிக்கப்பட்டுள்ளன. தெருவிளக்குகள் உடைந்தன..
இந்த மோதலைத் தடுக்க வந்த போலீசாரையும் அவர்கள் தாக்கியுள்ளனர். இதனால் அந்த பகுதியே கலவர பூமிபோல் காணப்பட்டது. இதையடுத்து, போலீசார் 30 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.