குற்றாலம் மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கு.. சுற்றுலா பயணிகள் குளிக்க தடை!
வெள்ளப்பெருக்கினால் குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
Recommended Video

நெல்லை: குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டிருக்கிறது.
தமிழகத்தின் மிக சிறந்த சுற்றுலா ஸ்தலங்களில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் அமைந்துள்ள குற்றாலம். இங்கு ஆண்டுதோறும் ஜுன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்கள் சீசன் காலமாகும். இங்கு குளிப்பதற்கு உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகை தருவர்.

இந்த நிலையில் தற்போது கடந்த சில தினங்களாக அனைத்து அருவிகளிலும் தண்ணீர் சற்று குறைந்து விழுந்து வந்தது. மேலும் கடந்த இரு தினங்களுக்கு முன்பு சனி, ஞாயிறு விடுமுறை தினங்கள் என்பதால், சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்டது. இதனால் ஆண்,பெண் சுற்றுலா பயணிகள் நீண்ட நேரம் வரிசையில் நின்று குளிக்க அனுமதிக்கப்பட்டனர். இதே போல் பழைய குற்றலாம், ஐந்தருவி, புலியருவி, சிற்றருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் கூட்டதாலும், வாகன போக்குவரத்தாலும் சுற்றுலா பயணிகள் கூட்டத்தால் குலுங்கியது. கார் பார்க்கிங் வரை நீண்ட வரிசையில் நின்று மக்கள் குளித்து மகிழ்ந்தனர்.
இந்நிலையில் தற்போது, குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டிருக்கிறது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் மெயினருவி, ஐந்தருவி, பழைய குற்றலாம் ஆகிய அருவிகளில் நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. ஆனாலும் மெயினருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருப்பதால், பாதுகாப்பு கருதி அந்த அருவியில் மட்டும் பொதுமக்கள் குளிப்பதற்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். இதனால் சுற்றுலா பயணிகள் மிகுந்த ஏமாற்றம் அடைந்து உள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications