For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

எச்.ராஜாவே... திருப்பாவை சமஸ்கிருதமல்ல, நீ தமிழனும் அல்ல: பாரதிராஜா கடும் பாய்ச்சல்!

By Veera Kumar
Google Oneindia Tamil News

Recommended Video

    வைரமுத்துவை தரக்குறைவாக பேசிய எச்.ராஜாவுக்கு பாரதிராஜா கண்டனம்- வீடியோ

    சென்னை: திரைப்பட கவிஞர் வைரமுத்துவை கடுமையாக விமர்சனம் செய்த எச்.ராஜாவை கண்டித்து திரைப்பட இயக்குநர் பாரதிராஜா அறிக்கை வெளியிட்டுள்ளார்.

    ஆண்டாள் குறித்த கட்டுரையில் ஏற்கத்தகாத வார்த்தைகளை வைரமுத்து பயன்படுத்தியதாக எதிர்ப்பு எழுந்துள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர் உள்ளிட்ட பல இடங்களிலும் வைரமுத்துவிற்கு எதிராக இந்து அமைப்பினர் பெரும் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் கோயில் பக்தர்கள் குடும்பத்தோடு தர்ணா நடத்தி பரபரப்பை ஏற்படுத்தினர்.

    இந்த நிலையில், பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா, வைரமுத்துவை தரக்குறைவான வார்த்தைகளால் விமர்சனம் செய்ததாக கூறப்படுகிறது. ஆண்டாள் குறித்த கருத்துக்கு, வைரமுத்து டிவிட்டரில் அறிக்கை வெளியிட்டு மன்னிப்பு கேட்டார். அதேபோல, ராஜாவும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற குரல்கள் அந்த தரப்பில் இருந்து எழத்தொடங்கியுள்ளன. குறிப்பாக திரைப்பட துறையினரிடமிருந்து.

     சுதந்திரம் இல்லை

    சுதந்திரம் இல்லை

    இயக்குநர் பாரதிராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: தமிழகத்தில் தனிமனித உரிமை பறிக்கப்பட்டு, எவ்வளவோ நாட்களாகிவிட்டன. எழுத்துச் சுதந்திரம், பேச்சு சுதந்திரம், கருத்து சுதந்திரம் இல்லாமல் போய்விட்டது. சமீபத்தில் நிகழ்ந்த ஒரு கசப்பான சம்பவம், இரவெல்லாம் என்னைத் தூங்கவிடாமல் செய்தது. தமிழகத்தின் வரலாற்றில் புலவர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள் தோன்றி இறவாப்புகழ் அடைந்திருக்கிறார்கள். இன்று நம் கொடுப்பினை, நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கும் பெருங்கவிஞன் கவிப்பேரரசு வைரமுத்து, தமிழைத் திசைகள்தோறும் தெரியப்படுத்தியவர்.

     இரண்டு காப்பியங்கள்

    இரண்டு காப்பியங்கள்

    இந்திய அரசின் பத்மஸ்ரீ, பத்ம பூஷண், சாகித்ய அகாடமி எனத் தன் படைப்புகளால் தமிழை உலக உச்சிக்கு கொண்டுபோன பெருமைக்குரிய தமிழன் வைரமுத்து. மணிமேகலையும் சிலப்பதிகாரமும் இரட்டைக் காப்பியங்கள் என்றால், வைரமுத்து படைத்த கள்ளிக்காட்டு இதிகாசமும், கருவாச்சி காவியமும் எளிய மனிதர்களின் இரட்டைக் காப்பியமில்லையா? அந்த அளவில் தமிழை எளிமைப்படுத்திய கலைஞனை, இழிசொற்களால் எப்படிப் பேசலாம்? வைரமுத்து என்பவர் தனிமனிதனல்ல, தமிழினத்தின் பெரு அடையாளம் என்பதை விமர்சிப்பவர்களே உணர்ந்துகொள்ள வேண்டும்.

     அதிகாரம் இல்லை

    அதிகாரம் இல்லை

    ஒரு படைப்பாளன் தன் கருத்துகளைச் சொல்லலாம், இல்லை மேற்கோள் காட்டலாம். அதை அட்சர சுத்தமாக தவறென்று தட்டிக்கேட்க எவனுக்கும் அதிகாரமில்லை. சங்க இலக்கியம், பக்தி இலக்கியம், சமகால இலக்கியம் என்ற பாகுபாடில்லாமல் மறைந்த கவிஞர்களை, எழுத்தாளர்களை மேடைதோறும் முழங்கி, அவர்களின் பெருமைகளைப் பட்டியலிடும் கவிஞனை, எப்படி நாக்கில் நரம்பில்லாமல் ஒருவன் பேசுவது?

     பிறப்பை இழிவுபடுத்திவிட்டார்

    பிறப்பை இழிவுபடுத்திவிட்டார்

    எச்.ராஜாவே... நீ பேசியது அநாகரீகத்தின் உச்சம். ‘தமிழை ஆண்டாள்' என்ற தலைப்பில், ஆண்டாளை எளிய மனிதனுக்கும் புரியும் விதத்தில் பேசிய கவிஞனின் பிறப்பை, இழிசொல்லால் இழிவுபடுத்தி விட்டாய். வைணவத்தைத் தமிழாக்கிய திருப்பாவையை, கருவறையில் இருந்து தெருவுக்குக் கொண்டுவந்து சாதாரண மனிதர்களின் காதுகளில் ஊற்றிய கவிஞனைத் தரம் தாழ்த்திப் பேசுவதா?

     வைரமுத்தாக முடியுமா?

    வைரமுத்தாக முடியுமா?

    எச்.ராஜாவே... திருப்பாவை சமஸ்கிருதமல்ல, தமிழ் என்பதை உணர்ந்துகொள். கொண்டாட வேண்டிய ஒரு கவிஞனை, அநாகரீகமாக பேசும் ராஜாவே... இப்படிப் பேச உனக்கு அதிகாரம் கொடுத்தது யார்? வைரமுத்து போல உன்னால் தமிழினத்திற்கு இலக்கியம் படைக்க முடியுமா? சோர்ந்து கிடக்கும் மனிதர்களைத் தட்டி எழுப்ப, ஒரே ஒரு பாடல் எழுத முடியுமா? அடையாளப்படுத்தப்பட்ட தமிழனை அழிக்க நினைக்காதே...

     உழைப்பாளி

    உழைப்பாளி

    எளிய, ஏழைக் குடும்பத்தில் பிறந்து, தமிழை 23 மொழிகளுக்கும் அறிமுகம் செய்து வைத்தவரை, எப்படி உன்னால் பேச முடிகிறது? வைரமுத்துவின் படைப்புகளைப் படித்து, ஆராய்ச்சி செய்து நிறைய பேர் பட்டங்கள் வாங்கியிருக்கிறார்கள். அவரின் படைப்புகளைப் பல கல்லூரி, பல்கலைக் கழகங்களில் பாடமாய் வைத்திருக்கிறார்கள். அவரது உழைப்பையும் முயற்சியையும் பார்த்து, எத்தனையோ இளைஞர்கள் முன்னுக்கு வந்திருக்கிறார்கள்.

     இந்தியா துண்டாடப்பட போகிறது

    இந்தியா துண்டாடப்பட போகிறது

    நிறைய மனிதர்களின் வாழ்வுக்கு ஓர் வழிகாட்டியாய் வாழும் ஒரு மனிதனை நாக்கில் நரம்பில்லாமல் எப்படிப் பேசமுடியும்? உன்னைப் போன்ற மனிதர்களால்தான் இந்தியா துண்டாடப்படப் போகிறது என்ற அச்சம் எனக்கு வருகிறது. கவனமாகப் பேசுங்கள் ராஜாவே... உன்னைப் போல நிறைய மனிதர்கள் இந்த நாட்டில் இருக்கிறார்கள். கவிப்பேரரசு வைரமுத்து போன்ற சில நல்ல அடையாளங்கள்தான் இருக்கின்றன.

     எங்க வம்சம்

    எங்க வம்சம்

    எங்கள் வம்சாவழி, எங்கள் உணர்ச்சிகளின் வடிகாலே ஆயுதங்கள்தான். கால மாற்றமும், விழிப்புணர்வும்தான் எங்களை ஆயுதக் கலாச்சாரத்தில் இருந்து மாற்றி வைத்தது. கவிப்பேரரசு வைரமுத்துவை நீ பேசவில்லை. எங்கள் தாய்வழி சகோதர, சகோதரிகளை, எங்கள் தொப்புள்கொடி உறவுகளைக் கொச்சைப்படுத்திவிட்டாய்.

     ஆயுதம் ஏந்தும் குற்றம்

    ஆயுதம் ஏந்தும் குற்றம்

    உன்னுடைய பேச்சு எங்கள் தமிழர்களைப் பழித்தது, தமிழ் உணர்வுகளை சிதைத்தது. நீ தமிழனாக இருந்தால் அப்படிப் பேசியிருக்க மாட்டாய். பரதேசம் தப்பி வந்தவன் நீ. நாங்கள் ஆயுதங்களை மறந்துவிட்டோமே ஒழிய, தன்மானத்தையும், வீரத்தையும், விவேகத்தையும் இழக்கவில்லை. எச்சரிக்கை... மறுபடியும் எங்களை ஆயுதம் ஏந்தும் குற்றத்திற்கு ஆளாக்கிவிடாதே... இப்படித் தவறாகப் பேசுபவருக்கு, உடனிருக்கும் நல்ல தமிழ்த் தலைவர்கள் பாடம் புகட்டக் கடமைப்பட்டவர்கள் என்பதை இந்த அறிக்கையின் மூலமாகப் பதிவு செய்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    English summary
    Film director Bharathiraja issues statement, condemning H. Raja who criticized movie poet Vairamuthu. Article on Aandal by Vairamuthu spark fire in Tamilnadu.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X