பெருந்தலைகளுடன் தஞ்சாவூர் களத்தை சந்திக்கும் அதிமுக- வேட்பாளர்கள் பயோடேட்டா
எம்.ஜி.எம். சுப்பிரமணியன்
திருவையாறு தொகுதி அதிமுக வேட்பாளராக எம்.ஜி.எம்.
சுப்பிரமணியன் (வயது 67) அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் 1980-1984-ல் திருவையாறு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்தவர். 2002-ல் தஞ்சாவூர் மாவட்ட செயலராக இருந்தார். தற்போது திருவையாறு தொகுதி கழகச் செயலராக இருக்கிறார்.
வைத்திலிங்கம்
ஒரத்தநாடு தொகுதி அதிமுக வேட்பாளராக அமைச்சர்
வைத்திலிங்கம் (வயது 60) களமிறக்கப்பட்டுள்ளார். 2001, 2006, 2011 தேர்தலில் ஒரத்தநாடு தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வானார். 2001-2006-ல் தொழில்துறை, ஊரகத்தொழில்துறை, வனத்துறை அமைச்சராகவும் 2011-16ல் வீட்டு வசதி, நகர்ப்புற வளர்ச்சி, வேளாண்துறை அமைச்சராகவும் பதவி வகித்தவர். 2003-ம் ஆண்டு முதல் தஞ்சை தெற்கு மாவட்ட செயலராக இருந்து வருகிறார்.
எம். ரெங்கசாமி
தஞ்சாவூர் தொகுதி அதிமுக வேட்பாளராக சிட்டிங் எம்.எல்.ஏ.
ரெங்கசாமி (வயது 60) நிறுத்தப்பட்டுள்ளார். அத்துடன் சட்டசபை பொது நிறுவனங்கள் குழு உறுப்பினராகவும் உள்ளார்.
சேட்டு
திருவிடைமருதூர் தொகுதி அதிமுக வேட்பாளராக யு.
சேட்டு (வயது 50) நிறுத்தப்பட்டுள்ளார். 1991-ல் அதிமுகவில் இணைந்தவர் இவர். முள்ளுக்குடி கிளை கழக பிரதிநிதி, தஞ்சாவூர் வடக்கு மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலர் என பதவிகளை வகித்தவர்.
ரத்னா
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அதிமுக வேட்பாளராக போட்டியிடும் எஸ்.ரத்னா ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட ராம.ராமநாதன் மாற்றப்பட்டு அவருக்குப் பதிலாக புதிய வேட்பாளராக அறிவிக்கப்பட்டவர். ரத்னா, கும்பகோணம் நகராட்சித் தலைவர். கும்பகோணம் மகாமகத்தை திறம்பட செய்து முடித்த ரத்னாவிற்கு பரிசாக கிடைத்ததுதான் இந்த எம்.எல்.ஏ சீட். ரத்னாவின் கணவர் பி.எஸ். சேகர், தொழிலதிபர். ரதிமீனா டிராவல்ஸ் உரிமையாளர்தான் இந்த பி.எஸ். சேகர். ரத்னாவின் மகன் பிரகாஷ்பிரபு, மகள் பிரியதர்ஷனி (மருத்துவர்). ரத்னா, தற்போது கும்பகோணம் நகர்மன்றத் தலைவராக உள்ளார். 2001 முதல் 2012 பிப்ரவரி வரை அதிமுகவின் நகரச் செயலராக இருந்துள்ளார்.
கோவிந்தராஜன்
பேராவூரணி தொகுதி வேட்பாளராக மா. கோவிந்தராஜன்
(வயது 66) அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் சேர்வை சமூகத்தைச் சேர்ந்தவர். 17 ஆண்டுகாலம் பேராவூரணி நகர அதிமுக செயலர், 7 ஆண்டுகள் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலர், தற்போது அதிமுக தொகுதி செயலர்.
சி.வி.சேகர்
பட்டுக்கோட்டை தொகுதி வேட்பாளராக சி.வி.
சேகர் (வயது 54) நியமிக்கப்பட்டுள்ளார். மதுக்கூர், ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத் தலைவராக பதவி வகித்திருக்கிறார்.
துரைக்கண்ணு
பாபநாசம் தொகுதி அதிமுக வேட்பாளராக சிட்டிங் எம்.எல்.ஏ. இரா.
துரைக்கண்ணு (வயது 68) நிறுத்தப்பட்டுள்ளார். 2006, 2011-ம் ஆண்டுகளில் எம்.எல்.ஏ.வாக வென்றவர். பாபநாசம் ஒன்றிய கழக செயலராக இருக்கிறார்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications