For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பாஜக அரசு ஜிஎஸ்டியை அவசரப்பட்டு அமல்படுத்திவிட்டது... ப.சிதம்பரம் பரபர குற்றச்சாட்டு: வீடியோ

பாஜக அரசு ஜிஎஸ்டியை அவசரப்பட்டு அமல்படுத்திவிட்டது என முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

By Suganthi
Google Oneindia Tamil News

காரைக்குடி: பாஜக அரசு ஜிஎஸ்டி வரிவிதிப்பை அவசரப்பட்டு அமல்படுத்திவிட்டது என முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார்.

பாஜக அரசு நள்ளிரவில் பாராளுமன்றத்தை கூட்டி, நாடு முழுவதும் ஜிஎஸ்டி வரியை அமல்படுத்தியுள்ளது. இந்த வரிமுறையில் பல்வேறு குழப்பங்கள் உள்ளன என பொருளாதர நிபுணர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில், ஜிஎஸ்டி வரி அமலுக்கு வந்தது குறித்து முன்னாள் நிதி அமைச்சர் காரைக்குடியில் செய்தியாளர்களிடம் கூறியபோது, ''ஜிஎஸ்டி வரி பணவீக்கத்தை அதிகரிக்கும். மேலும் சிறு, குறு வியாபாரிகளை நலிவடையச் செய்யும்.

மேலும் காங்கிரஸ் அரசு அறிமுகப்படுத்திய ஜிஎஸ்டி வரிமுறையை நிதானமாக செயல்படுத்தியிருக்க வேண்டும். முதலில் ஓரிரு மாதங்கள் சோதனை முறையில் செயல்படுத்திப் பார்த்து அதன்பிறகு குறைகளை நிவர்த்தி செய்து முழுமையாக அமல்படுத்தி இருக்க வேண்டும். தற்போது அமல்படுத்தப்பட்டிருக்கும் ஜிஎஸ்டியால், 80 சதவீத பொருட்களின் விலை அதிகரித்துள்ளது. இதனால் மக்கள் பாதிப்புக்கு ஆளாவர்'' என கூறினார்.

English summary
Ex. Finance minister P.Chidambaramtold that GST will affect the people as 80% of the goods price was increased and Bjp government implemented it in hurry.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X