மதுரை எஸ்பிஐ வங்கிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் - போலீஸ் சோதனை

Posted By:
Subscribe to Oneindia Tamil

மதுரை: மதுரை மாநகரில் உள்ள 52 எஸ்.பி.ஐ வங்கிக் கிளைகளில் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக வந்த தகவலை அடுத்து போலீசார் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

பள்ளிகள், கோவில்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த காலம் போய் இப்போது வங்கி கிளைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர்.

Bomb threat at SBI branch in Madurai

எஸ்பிஐ வங்கி தற்போது பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. குறைந்த பட்ச தொகை இருப்பு, ஏடிஎம் வங்கிகளில் பணம் எடுக்க கட்டுப்பாடு, ஆகிய விதிமுறைகளால் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர் யாராவது வெடிகுண்டு மிரட்டல் விடுத்திருக்கலாமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

வாரத்தின் முதல்நாளான இன்று வெடிகுண்டு மிரட்டல், அதைத்தொடர்ந்து நடைபெறும் சோதனைகளால் மதுரையில் எஸ்பிஐ வங்கிக்கிளைகள் பரபரப்படைந்துள்ளன.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Somebody call to the manager of the State Bank of India on Madurai head office on Monday saying that they would blow up the bank with a bomb on June 19.
Please Wait while comments are loading...