For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பேஸ்புக்கில் புதிதாய் பரவும் “புக் பக்கெட் சேலஞ்ச்”- வாசிப்பு பற்றிய விழிப்புணர்வு பரவல்!

Google Oneindia Tamil News

சென்னை: ஐஸ் பக்கெட், ரைஸ் பக்கெட் சேலஞ்ச்சை தொடர்ந்து பேஸ்புக்கில் தற்போது காட்டூத்தீயாக பரவி வருவகின்றது "புக் பக்கெட் சேலஞ்ச்".

இதை எந்த புண்ணியவான் உருவாக்கினாரோ சரியாகத் தெரியவில்லை.

ஆனால், பேஸ்புக் ரசிகர்களின் ஆதரவில் பரவோ,பரவென்று பரவி வருகின்றது.

டாப் 10 புத்தகப் பட்டியல்:

டாப் 10 புத்தகப் பட்டியல்:

இந்த சேலஞ்ச் என்னவென்றால், ஒருவர் தனக்குப் பிடித்தமான புத்தகங்களில் முதலிடம் பிடித்த பத்து புத்தகங்களைப் பட்டியல் இட வேண்டும். பின்னர் தன்னுடைய நண்பர்களை இந்த சேலஞ்ச்சுக்குள் இழுக்க வேண்டும்.

ஏ.எல்.எஸ் விழிப்புணர்வு:

ஏ.எல்.எஸ் விழிப்புணர்வு:

ஏற்கனவே ஏ.எல்.எஸ் குறைப்பாட்டின் விழிப்புணர்வுக்காக பிரபலங்கள் இணைந்து "ஐஸ் பக்கெட் சேலஞ்ச்" நடத்தி நிதி திரட்டியது நாம் எல்லாரும் அறிந்த விஷயம்தான்.

ஐஸ் பக்கெட் சேலஞ்ச்:

ஐஸ் பக்கெட் சேலஞ்ச்:

ஒரு வாளி நிறைய குளிர்ந்த நீரை, ஐஸ் கட்டிகளுடன் அப்படியே தலையில் ஊற்றிக் கொண்டு மற்றொருவரை சேலஞ்ச் செய்யவேண்டும். பின்னர் நம்மால் முடிந்த நிதியை அந்த அமைப்பிற்கு அளிக்க வேண்டும் என்பதுதான் இதன் விதி.

 ரைஸ் பக்கெட் சேலஞ்ச்:

ரைஸ் பக்கெட் சேலஞ்ச்:

அடுத்ததாக, ரைஸ் பக்கெட் சேலஞ்சை மஞ்சு லதா கலாநிதி என்ற ஆந்திர மாநில பெண் பத்திரிக்கையாளர் அறிமுகம் செய்தார். அதன்படி, ஒருவேளை உணவுக்கு கூட தவிப்பவர்களுக்கு அரிசியை வழங்குவதுதான் இதன் சாரம்சம்.

இது புக் பக்கெட் சேலஞ்ச்:

இது புக் பக்கெட் சேலஞ்ச்:

அதனைத் தொடர்ந்து புத்தக வாசிப்பின் முக்கியத்துவத்தை சொல்லும் வகையில் இந்த புதிய சேலஞ்ச் காட்டூத்தீயாய் பரவி வருகின்றது இணையத்தில்.

சங்கிலித் தொடர்:

சங்கிலித் தொடர்:

கிட்டதட்ட சங்கிலித்தொடராக இந்த புத்தக வரிசையானது தொடர்ந்து கொண்டே செல்லும். இதனுடன் கூடவே நண்பர்களுக்கோ, நூலகங்களுக்கோ புத்தகங்களை கொடையாக வழங்கினாலும் அருமைதான்.

வரவேற்க வேண்டிய விஷயம்:

வரவேற்க வேண்டிய விஷயம்:

புத்தங்கள் நல்ல நண்பர்கள் என்ற கருத்தை மக்களிடையே எடுத்துக் காட்டும் வகையில் பரவி வரும் இந்த சேலஞ்ச் வரவேற்கத்தக்க ஒன்றுதான். ஆயிரம் கோவில்கள் அமைப்பதைக் காட்டிலும் சிறந்தது ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல் என்பது இதனால் பரவினால் மகிழ்ச்சிதான்.

English summary
Book bucket challenge speared over in face book virally. People will nominate friends for this book bucket challenge.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X