அன்ரிசர்வ் டிக்கெட், சீசன் டிக்கெட் புக் பண்றது ரொம்ப ஈஸி.. 'யுடிஎஸ் ஆப்' குறித்து தெற்கு ரயில்வே
சென்னை: முன்பதிவு இல்லாத டிக்கெட்டுகள், பிளாட்பார்ம் டிக்கெட், சீசன் டிக்கெட்டுகளை எங்கிருந்தும் புக்கிங் செய்வதற்காக யுடிஎஸ் ( UTS ) மொபைல் ஆப்பை ரயில்வே கொண்டுவந்துள்ளது இது தொடர்பாக விளம்பர வீடியோ ஒன்றையும் தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது.
ரயிலில் அன்ரிசர்வ் டிக்கெட் எடுக்க சென்னை சென்ரல், சென்னை எழும்பூர் உள்ளிட்ட முக்கிய ரயில் நிலையங்களில் நீண்ட வரிசையில் நிற்க வேண்டிய நிலை உள்ளது. அத்துடன் அவசர அவசரமாக ரயிலை பிடிக்க ஓடுவோர் ரயிலில் டிக்கெட் எடுப்பதற்காக வரிசையில் நின்று ஆக வேண்டிய நெருக்கடியும் ஏற்படுகிறது.

இதேபோல் சென்னையில் புறநகர் ரயில்களில் பயணிக்க வேண்டும் என்றாலும், அதற்கு டிக்கெட் எடுக்க காலை மாலை நேரங்களில் கூட்ட நெரிசல் ஏற்படும்.
இதை பார்த்த ரயில்வே நிர்வாகம் யுடிஎஸ் ( UTS ) மொபைல் ஆப்பை அறிமுகம் செய்துள்ளது இதன் மூலம் எங்கிருந்தபடியும் முன்பதிவு இல்லாத டிக்கெட்டுகள், பிளாட்பார்ம் டிக்கெட், சீசன் டிக்கெட்டுகளை எளிதாக முன்பதிவு செய்ய முடியும்.
Convenience at your fingertips!
— @GMSouthernrailway (@GMSRailway) January 31, 2020
Book Unreserved/Season/Platform tickets using user-friendly UTS Mobile App!@RailMinIndia @DrmChennai @DRMTPJ @drmmadurai @SalemDRM @propgt14 @TVC138 pic.twitter.com/xmrI6pMkYN
இது பயன்படுத்துவதற்கும் மிகவும் எளிதாக இருக்கிறது. இந்த ஆப்பை கூகுள் பிளே ஸ்டோரில் டவுன்லோடு செய்து பயன்படுத்துங்கள் என்று ரயில்வே விளம்பரம் வெளியிட்டுள்ளது. இந்த ஆப்பை டவுன்லோடு செய்தால் லாக் இன் ஐடியை உருவாக்கி உள்ளே நுழைந்து விரும்பும் இடத்திற்கு டிக்கெட்டுகளை புக்கிங் செய்ய முடியும்.
பணத்தை ரொக்கமாக எடுத்துக்கொண்டு போக தேவையில்லை. டிக்கெட் பிரிண்ட் அவுட்டும் தேவையில்லை. வரிசையில் நிற்கவும் தேவையில்லை. உங்கள் ஸ்மார்ட்போனில் வீட்டில் இருந்த படியே டிக்கெட் புக்கிங் செய்ய முடியும். இந்த ஆப்பால் முன்பதிவு இல்லாத டிக்கெட்டுகள் மூலம் வரும் வருமானம் பல மடங்கு அதிகரித்துள்ளது.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications